புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2013

நெடுந்தீவு எங்கள் கோட்டை. “இதற்குள் எவனடா வந்தவன்” ஈபிடீபி கொலை வெறியாட்டம்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீவகத்திற்கான ஒரேயொரு வேட்பாளராக 12ம் இலக்கத்தில் போட்டியிடும் யாழ் மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களை ஆதரித்து நெடுந்தீவில் அவரது ஆதரவாளர்கள் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது..
... நெடுந்தீவு மேற்கு ஒற்றைப் பனையடி என்றவிடத்தில் நேற்று மதியம் EPDP ஐச் சேர்ந்த சுதன் மோகனதாஸ் என்பவர்கள் துண்டுப் பிரசுரங்களைப் பறித்துக் கிழித்திருக்கிறார்கள்.
பின்னர் இரவு நேரம் நெடுந்தீவுப் பிரதேச சபையின் சிவப்பு நிற .NP. 253-5112 என்ற இலக்கம் கொண்ட பிக்கப் வாகனத்தில் வந்த பிரதேச சபைத் தலைவர் ரஜீப், ஈபிடீபி சுதன், மோகனதாஸ் , எட்வேட் ராஜா, ரஞ்சன், நெடுந்தீவு CTP பஸ் சாரதி அப்பன் உட்பட பலர் இரவுவேளை இரும்புக்கம்பி பொல்லுகள் சகிதம் சைமன் ஜேசுதாசன் ஜேசுதாசன் அன்ரனிற்றா ஆகியோரை அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.
இவர்களுடன் இருந்த வவுனியாவைச் சேர்ந்த ரணசிங்க ஆரியசேனா என்பவரையும் தாக்கியுள்ளனர்.
இவர்கள் தற்போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
நெடுந்தீவு எங்கள் கோட்டை. “இதற்குள் எவனடா வந்தவன்” என்று கேட்டு நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரஜீப் தாக்கியுள்ளார் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளார்கள்.
தீவகம், குறிப்பாக நெடுந்தீவு, இலங்கை இராணுவ ஒட்டுக்குழுவான EPDP யின் பயங்கரவாதப் பிடிக்குள் உள்ள பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
(மேலதிக இணைப்புநெடுந்தீவில் கூட்டமைப்பினரின் வீடுகளுக்குள்ளே ஈ.பி.டி.பி குண்டர்கள் புகுந்து அட்டகாசம்: பெண் உட்பட மூவர் படுகாயம்
நெடுந்தீவில் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பி குண்டர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் நெடுந்தீவு மேற்கிலுள்ள ஒற்றைப்பனையடியில் இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவில் மிக அண்மையில் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாகாண சபை பிரசாரப் பணிகளை கூட்டமைப்பினர் மேற்கொண்டு வந்தனர்.
ஈ.பி.டி.பி யின் பிரதேச சபை தவிசாளர் ரஜீப் தலைமையில் பிரதேச சபை வாகனத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர்களான சுதன், மோகனதாஸ், எட்வேட்ராஜா ரஞ்சன், வாகனச் சாரதி அப்பன் ஆகியோரும் பிரதேச சபைக்கு சொந்தமான மேலும் பல வாகனங்களில் மேலும் பல குண்டர்களும் சென்று இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
வீடொன்றிற்குள்ளாக சென்ற இவர்கள் வீட்டினை உடைத்து இரும்புக் கம்பிகளாலும் கொட்டன்களாலும் தாக்கியதோடு, வீட்டிலிருந்த பெண்ணொருவரையும் முற்றத்தில் இழுத்துப் போட்டு அடித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் நெடுந்தீவில் திருமணம் செய்து வசித்து வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரும் கூட்டமைப்பின் ஆதரவாளருமான ரணசிங்க ஆரியசேன (வயது 40), சைமன் யேசுதாஸன், யேசுதாஸன் அன்ரனிற்றா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் சில காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கூட்டமைப்பின் வேட்பாளர்களது துண்டுப் பிரசுரங்களையும் இவர்கள் மலக் குழிகளுக்குள்ளாக போட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நெடுந்தீவில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ad

ad