புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2013

காதலனை கொல்ல நினைக்கிறார்: இயக்குனர் சேரன் மீது மகள் பரபரப்பு புகார் (வீடியோ இணைப்பு)

தன்னை தன் காதலனிடமிருந்து பிரிக்க பார்ப்பதாகவும், காதலனை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் இயக்குனர் சேரன் மீது அவரது மகள் பரபரப்பை புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
குடும்ப பாங்கான படங்களை எடுப்பத்தில் வல்லமை படைத்த இயக்குனர் சேரனுக்கு, நிவேதா மற்றும் யாமினி(வயது 20) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள தனது வீட்டில், குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சேரனின் 2வது மகள் தாமினி, சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், தனது தந்தை தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாமினி, நான் சூளைமேட்டைச் சேர்ந்த சந்துரு என்பவரை நான் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். அவர் சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்சராகவும் உள்ளார்.
சினிமா விழா ஒன்றுக்கு என் தந்தையுடன் சென்றபோது தான் சந்துருவின் அறிமுகம் கிடைத்தது.
அதன் பிறகு தான் நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம், இது எனது தந்தைக்கு தெரியவந்ததும், படித்து முடித்தவுடன் சந்துருவை திருமணம் செய்து கொள் என்று தெரிவித்தார்.
ஆனால் கடந்த 2 மாதங்களாக என் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சந்துருவை மறந்துவிடும்படி என்னை மிரட்டுகிறார், அத்துடன் அவரை கொலை செய்ய பல முறை முயற்சி நடந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது என் தந்தை வெள்ளைத் தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கியதுடன், என்னை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு வந்து சந்துருவின் வீட்டில் தஞ்சம் அடைந்தேன்.
என் தந்தை எங்கள் காதலை பிரிக்க முயற்சிக்கிறார் என்று சந்துருவின் தாய் மற்றும் அக்காவிடம் கூறினேன்.
அவர்களுடன் வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன், என்னை என் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் சந்துருவின் வீட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொலிசார் பாதுகாப்பு அளித்தால், யாமினியை தங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள தயார் என சந்துருவின் குடும்பத்தினர் பதிலளித்துள்ளனர்.

ad

ad