புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2013

நவநீதம்பிள்ளையின் வருகையால் அச்சம் - தடயங்களை அழிக்கும் அரசு?
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பில் அச்சமடைந்துள்ள இலங்கை அரசாங்கம், தாம் செய்த குற்றங்களின் தடயங்களை அழிக்கும் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன் பிரதான இடத்தை பெறும் வெலிகடை சிறைச்சாலையில் கடந்த வருடம் நடந்த படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சாட்சியங்களையும் தடயங்களையும் அழிக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
நவநீதம்பிள்ளை வெலிகடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவார் என அறிய கிடைத்துள்ளமை அடுத்து சாட்சியங்களை அழிப்பதை துரிதப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறைச்சாலையில் ஏற்பட்ட கிளர்ச்சியின் போது சரணடைந்ததாக கூறப்படும் நிராயுதபாணிகளான சுமார் 30 கைதிகள் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கு அமைய அங்கு சென்ற இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் சிறையில் ஏற்பட்டுள்ள சகல அடையாளங்களையும் சரி செய்து, அங்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்தமைக்கான அடையாளங்களை மறைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலான கனமான பலகைகளினால் அமைக்கப்பட்டுள்ள பழைய கதவிலுமும் துப்பாக்கிச் அடையாளங்கள் இருப்பதால், அதனை சீர் செய்யும் பணிகள் தற்பொழுது நடந்து வருகின்றன.
கதவை சீர் செய்யும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போது, கதவின் வலது புறத்தில் இருந்து இரண்டு எல்.எம்.ஜி தோட்டக்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் கைதிகள் மீது இலகு ரக இயந்திர துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது முழுமையான மனித உரிமை மீறல் குற்றச் செயலாகும்.
அதேவேளை தற்பொழுது சிறை கைதிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக பேசப்படும் பொதுமன்னிப்பு பிரசாரமும் ஒரு ஏமாற்று நடவடிக்கையாகும் என கூறப்படுகிறது.
இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட உள்விசாரணையின் போது (இந்த விசாரணை தொடர்பிலான எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை) எதிராக சாட்சியமளித்த 82 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் நவநீதம்பிள்ளை முன் சாட்சியமளிப்பார்கள் என நினைத்து அவர்களின் வாய்களை மூடுவதற்காக இந்த பொதுமன்னிப்பு என்ற கதை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறை கைதிகள் இராணுவம் நடத்திய தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியாளர்களாவர். அவர்களை விடுதலை செய்வதாக தெரிவித்து, சாட்சியமளிப்பதை தடுத்து 82 படிவங்களை நிரப்பி அவர்களிடம் இருந்த கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad