புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013




        ழ்மையின் காரணமாக திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் செய்துவைக்கிறேன் என்கிற பெயரில் மணப்பெண்களுக்கு  ‘கன்னித்தன்மை’ பரிசோதனை செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிற
து.nakkeeran "பிற்போக்குத் தனமான'’செயலுக்கு காரணமாகியிருக்கிறார் என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌஹானுக்கு எதிராக  நாடுமுழுவதும் உள்ள மகளிர் அமைப்பினரிடமும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்த சர்ச்சை குறித்துப்பேசும்  ‘பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்திற்கு எதிரான’ அமைப்பின் தலைவர் நிர்மலா கொற்றவை யோ, ""கடந்த ஜூன் 7-ந்தேதி வெள்ளிக்கிழமை மத்தியபிரதேச பேட்டுல் மாவட்டத்தில் சிக்கோலி தாலுக்கா ஹர்து கிராமத்தில்  கூட்டுத்திருமண ஏற்பாட்டு நிகழ்வின் போது 400-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கன்னித்தன்மை -மகப்பேறு நிலைக்கான பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அம் மாநில முதலமைச்சரின்  இந்த செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்கள் அமைப்பினர் போராடியும் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.  



2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 60 ஆயிரத்து 977 திருமணங்களை செய்து வைத்துள்ளதாக பெருமை பீற்றிக்கொள் கிறார் பி.ஜே.பி. முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌஹான்.  முதலில் பெயரிலேயே பிரச் சினை தொடங்குகிறது. கன்னிகை தானம் என்றால் என்ன, பெண் என்பவள் தானம் கொடுக்கும் ஒரு பொருளா? ஆண்கள் என்ன பிச்சைக்காரர்களா? மேலும், ஆணாதிக்க திருமண முறையை, குறிப்பாக இந்துமத திருமண முறையை அழுத்தம் கொடுத்து பறை சாற்று கிறது.  கன்னித்தன்மைக்கான பரிசோதனையை திணிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. அதுவும் பெண்களுக்கு மட்டும் இத்தகைய கற்பு சார்ந்த பரிசோதனை என்பது அவமானத் திற்குரியது. 


ஒட்டுமொத்த பெண் இனத்தையுமே கேவலப்படுத்தும் ஒரு செயல் இது. பாரத மாதா என்று பெண்ணை நாட்டின் தாயாக சொல்லும் ஒரு நாட்டில்தான் இந்தக் கேவலம் நடக்கிறது. இங்கு ஆணின் ‘நம்பகத்தன்மைக்கான’ பரிசோதனை என்ன? அதை ஏன் ஆட்சியரோ, அலுவலர்களோ வலியுறுத்தவில்லை. சம்பந்தப்பட்ட ஆண் ஏற்கனவே திருமணம் ஆனவனா, உடலுறவில் ஈடுபட்டவனா, குழந்தை பெற்று விட்டவனா என்கிற பரிசோதனைகள்   ஆணுக்கும் உண்டா? அறம், கற்பு இவையெல்லாம் இரு தரப்புக்கும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்?

சில பெண்கள் கர்ப்பமாய் இருந்ததாகவும், மோசடி தவிர்க்க என்றும் காரணம் சொல்லப் படுகிறது.... இதுவும் கேலிக் கூத்து.  விரும்பி சேர்ந்து வாழ்தலை நீதிமன்றமே  இன்று அங்கீகரிக் கிறது. அப்படி விரும்பி சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம் செய்து கொள்ளும் ஆசை கொண்ட நபர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி அற்றவர்களா.. அப்படிப்பட்ட ‘விதிகள்’ ஏதேனும் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளதா? 

இதுமட்டுமல்லாமல் ஒரு பெண் கன்னித் தன்மையோடுதான் இருக்கிறாள் என்பதை அறிவியல்பூர்வமாக முழுமையாக கண்டுபிடிக்க முடியாது.  தொடர்ந்து ம.பி.யில் இந்த சர்ச்சை எழும்பிக்கொண்டிருக்கிறது. பிறகு மறுக்கப் படுகிறது. இப்படி பெண்களுக்கு எதிராக செயல்பட்டுவரும் முதல்வர் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று கோரிக்கைவைக்கிறார் ஆவேசமாக. 

பூதோலியா, துர்கா மால்வியா ஆகிய இரண்டு ஹெல்த் ஒர்க்கர்கள்தான் இந்த பரிசோதனையை செய்ததாக குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட கலெக்டர் ராஜேஷ் பிரசாத் மிஸ்ரா மறுப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் அறிவித்திருக்கிறார். ஒரு மாநி லத்தை ஆளும்போதே இப்படிப் பெண் களுக்கு எதிராக செயல்படும் பி.ஜே.பி. நாட்டையே ஆளவந்தால்  பெண்களுக்கு எதிராக இன்னும் என்னென்ன செய்யுமோ?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள் பெண்ணிய வாதிகள்

ad

ad