புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013

சப்ரகமுவையில் இணைந்து செயற்பட்டமைக்கு இதொகா தந்த பரிசுதான் என்மீது கொட்டகலையில் நடத்தப்பட்ட தாக்குதல் - மனோ

குறைந்த தொகை தமிழர்கள் வாழும் மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுகொடுக்க அரசியல் பேதங்களை மறந்து இணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய தமிழின உணர்வுடன் இரத்தினபுரி,
கேகாலை மாவட்டங்களில் இணைந்து செயற்பட்டமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனக்கு தந்த பரிசுதான், கொட்டகலையில் என்மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல்.
போதாமைக்கு இப்போது நமது பாரிய பங்களிப்புடன் சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட தமிழின எழுச்சியால் பதவி பெற்ற ஒருவரும் என்னை தாக்கி அறிக்கை விடுத்து தன் எஜமான் விசுவாசத்தை காட்டுகிறார்.
இனவுணர்வுக்கும், நன்றியுணர்வுக்கும், பெருந்தன்மை அரசியலுக்கும் இதொகா என்ற கட்சியில் இன்று இடமில்லை. பெருந்தலைவர் சௌமியமூர்த்தியுடன் அந்த கால கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது  என்பதை மலையக தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
யானை சின்னத்தில் போட்டியிடும் முன்னணியின் வேட்பாளர்கள் ராஜ்குமார், சந்திரகுமார் ஆகியோரை ஆதரித்து தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் பிரதேசத்தில் பல்வேறு கூட்டங்கள் இடம்பெற்றன. முன்னணியின் தலவாக்கலை வட்ட செயலாளரால் ஏற்பாடு செய்யப்பட்டு வேட்பாளர்கள், முன்னணியின் ஊடக செயலாளர் சின்னதம்பி பாஸ்கரா மற்றும் பெருந்தொகையானோர் கலந்துகொண்ட கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன் மேலும்  கூறியதாவது,
நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் வன்முறையை எதிர்த்து படித்த பட்டதாரி வாலிபர்களை ஆதரியுங்கள் என்று நான் சொன்னால் அது இவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது.  இவர்களால் தூண்டி விடப்படும் வன்முறைகளில் தெரிந்தோ, தெரியாமலோ சம்பந்தப்பட்டு கை, கால்களை இழந்து வாழ்நாள் பூராவும் முடவர்களாகவும், நொண்டியர்களாகவும் வாழ வேண்டாம் என்று எனது மலையக இளம் உடன்பிறப்புகளுக்கு அறிவுரை கூறினாலும், அது இவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது.
நீங்கள்  உயிரையோ, அங்கங்களையோ இழந்தால், உங்கள் தாய், தந்தையர், உடன்பிறப்புகள், மனைவி, பிள்ளைகள்தான் உங்களுடன் சேர்ந்து வாழ்நாள் பூராவும் துன்பப்பட போகிறார்கள்.  உங்களை தூண்டிவிடும் தலைவர்கள்  ஒருபோதும் உங்களுடன் உடன் வர மாட்டார்கள். மலையக இளைஞர்களே, நீங்கள் இனியும் இந்த தோட்ட சிறைகளில் இருக்க வேண்டாம் என்றும், இந்த அடாவடி வன்முறை நாட்டாண்மைகாரர்களை தூக்கியெறியுங்கள் என்றும், நாம் சொன்னால் இவர்களுக்கு கோபம்  வருகின்றது. மலையக இளைஞர்களுக்கு இந்த  உண்மைகளை நான் எடுத்துகூறினால், இவர்களுக்கு இந்த உண்மை சுடுகின்றது. அதனாலேயே கோபம் வருகின்றது.
ஜதொகா, இதொகா, தொதேச, மலையக மக்கள் முன்னணி, யூஎன்பி, ஸ்ரீலங்கா என்று எல்லா சங்கங்களையும் சேர்ந்த அனைத்து  தோட்ட தொழிலாளர்களுக்கும் பொதுவாக அடிப்படை சம்பளத்தை  உயர்த்து என்று நான் ஆர்ப்பாட்டம் செய்தேன். மலையக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில், கொட்டகலையில் நான் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த போது என்மீது மது வெறியில் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது முழு மலையகத்துக்கும் தெரியும். என் மீது தாக்குதல் நடத்தியதுடன் நின்று விடாமல், என்னை பெற்ற தாயையும், என்னை வளர்த்துவிட்ட என் தந்தை அமரர் வீ பி. கணேசனையும் இழி வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி தீர்த்தவர்கள் யார் என்பதும் மலைநாட்டுக்கு  தெரியும்.    
இது தமிழின உணர்வுடன் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து செயற்பட்டமைக்கு அவர்கள் எனக்கு தந்த  பரிசு என எடுத்துக்கொண்டேன். எனவே இந்த வன்முறையாளர்களின் வன்செயல்கள் நேரடியாகவே எனக்கு நன்கு தெரியும். என் இடது கையின் நடுவிரல் இன்றும் மடக்க முடியாமல் வலிக்கின்றது. ஆனால் அதைவிட எனது மலையக  இளைய சமூகத்தை தவாறாக வழி நடத்தி இவர்கள் கொண்டு நடத்தும் வன்முறை அரசியல் என்னை நெஞ்சையே  வலிக்க செய்கின்றது.
         

ad

ad