புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2013

பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன்! முள்ளிவாய்க்கால், கேப்பாப்பிலவு, புதுமாத்தளன் மக்களிடம் நவநீதம்பிள்ளை உறுதி
காணா­மல்­போனோர் விவ­காரம் உட்­பட யுத்­தத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­கள் தொடர்பில் ஆழ­மாகக் கவனம் செலுத்தி அவற்­றுக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க எனது முழு அதி­கா­ரத்­தையும் பயன்­ப­டுத்­துவேன். பாதிக்­கப்­பட்ட உங்­க­ளது ஆதங்­கங்கள் எனக்கு புரி­கின்­றது என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை தெரி­வித்­துள்ளார்.
முள்­ளி­வாய்க்கால்,
புதுமாத்தளன் மற்றும் கேப்­பாப்­பி­லவு பகு­தி­க­ளுக்கு நேற்று விஜயம் செய்த நவ­நீ­தம்­பிள்ளை அந்­தப் ­ப­குதி மக்­களின் குறை­பா­டு­களை கேட்­ட­றிந்­து­கொண்டார்.
மக்கள் அழுது புலம்பி, காணாமல் போன உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமக்கு அடிப்படை வச­தி­களை செய்து தரு­மாறும் கோரிக்கை விடுத்­தனர்.
இதன் போது அந்த மக்கள் மத்­தியில் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே நவ­நீ­தம்­பிள்ளை மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
முள்­ளி­வாய்க்­கால் ­ப­கு­தியில் கருத்துத் தெரி­வித்த அவர், நான் தூர தேசத்­தி­லி­ருந்து உங்­களின் பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்­வ­தற்­கா­கவே வந்­துள்ளேன்.
காணாமல் போனோர் விவ­காரம் தொடர்பில் நான் நன்கு அறிந்­துள்ளேன். இதேபோல் உங்­க­ளது ஏனைய பிரச்­சி­னைகள் தொடர்­பிலும், ஆழ­மாக கவனம் செலுத்தி தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்­க ­வேண்­டிய பொறுப்பு எனக்­குள்­ளது.
இதனால் எனக்­குள்ள அதி­கா­ரங்கள் அனைத்­தையும் பயன்­ப­டுத்தி பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைக்­காண முயற்­சிப்பேன்.
ஐ.நா. நிறு­வ­னங்கள் உத­விகள் வழங்கும் போது வடக்கு, கிழக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு கூடு­த­லான உதவி கிடைப்­ப­தற்கு நான் பரிந்­துரை செய்வேன்.
காணாமல் போனோர் விவ­காரம், தமிழ் அர­சியல் கைதி­களின் விடயம் தொடர்பில் வெள்ளிக்­கி­ழமை அர­ச­த­ரப்­பி­னரை சந்­திக்கும் போது அவர்­களின் பதி­லைக் ­கோ­ருவேன்.
நாடு திரும்­பி­யதும் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் முன்­னு­ரிமை கொடுத்து இந்த விட­யங்கள் குறித்து நட­வ­டிக்கை மேற்­கொள்வேன் என்று தெரி­வித்தார்.
இதேபோல் கேப்­பாப்­பி­லவு மக்கள் மத்­தியில் குறை­பா­டு­களை கேட்­ட­பின்னர் கருத்துத் தெரி­வித்த நவ­நீ­தம்­பிள்ளை, காணாமல் போனோ­ரது உற­வி­னர்­க­ளான நீங்கள் படும் துய­ரத்தை நான் புரிந்து கொண்டேன்.
காணி அப­க­ரிப்பு விட­யத்­திலும், விட­யங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொண்டேன்.
இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் முக்­கி­யத்­துவம் வழங்­குவேன் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ad

ad