புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2013




           "அரை அணா, ஒரு அணா என பைசா பைசாவாகச் சேர்த்து, சாதிமக்களை உயர்த்திய நாடார் மகாஜன சங்கத்தை, அநியாயமாக அழிக்கப் பார்க்கிறார்களே' எனக் குமுறுகிறார்கள்,
தென்மாவட்டங்களில்! nakeeran

மதுரையில் உள்ள இச்சங்கத்தின் தலைமை அலுவலகத்துக்குள், சமீபத்தில் திடீரென ஒரு கோஷ்டி நுழைந்து, "நாங்கள்தான் உண்மையான மகாஜன சங்க நிர்வாகிகள்' எனக் கூற, மோதல் ஏற்பட்டது. போலீஸ் வந்து, சங்க அலுவலகத்தின் கதவுகளை மூடி, சீல் வைத்தது.  யார் உண்மையான நிர்வாகிகள் என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கிவருவோரை அனுமதிப்பதாகவும் கூறிவிட்டது. இந்த நிகழ்வு, நாடார் சமூகத்தில் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சங்கத்தின் பழைய(!) நிர்வாகத்தின் மீது அதிருப்தியைக் கொட்டிப் பேசுகிறார், புதிய பொதுச்செயலாளர் என்று கூறும் பழைய பேராயர் கிறிஸ்டோபர் ஆசிரின் மகன், ஜோயல். 



""எங்கள் சமுதாயத்தை பொருளாதாரரீதியாக உயர்த்திக் காட்டிய மகாஜன சங்கம், அரசியல் பாகுபாடு இல்லாம வளர்ந்து, 22 நிறு வனங்களைக் கொண்டதா வளர்ந்திருக்கு. ஆனாலும், கடந்த  10 ஆண்டுகளா ஏகப்பட்ட முறைகேடுகள். 97-99 காலத்தில் அறிவானந்த பாண்டியன், பொதுச்செயலாளர் ஆனாரு. அப்போ, பொதுச்செய லாளர் பயன்பாட்டுக்கு சங்கப்பணத்தில் வாங்கின 6 லட்சம் ரூபாய் "சபாரி' காரை, தன் பெயர்லயே தன் பாத்திரக்கடை முகவரியில பதிவுசெஞ்சுகிட்டாரு. அந்தத் தகராறில், அறிவா னந்த பாண்டியனின் ஆதரவாளரான ரேஷன் கடை பாண்டிங் கிறவர்  கொல்லப்பட்டார். பிறகு, அறிவானந்த பாண்டியன் விபத் தில் இறந்துபோக, நாடார் இளைஞர் பேரவைச் செயலாளரா இருந்த கரிக்கோல்ராஜ், மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளரா ஆனாரு. வெறும் பச்சைப் போர்வையோட சைக்கிள்ல வந்தவரு, கார், பங்களா, அடிக்கடி வெளிநாட்டு டூர்னு தலைகீழா மாறிட்டாரு. எங்க முன்னோர்கள் கஷ்டப்பட்டு உழைச்சு, தானமா கொடுத்த சொத்துக் களை வித்ததுதான் இவரு செஞ்ச சாதனை!'' என்றவர், தொடர்ந்து, 

""சங்கத்துக்குச் சொந்தமான வாசன் சேர்மத்தாய் கல்லூரியை மெர்க்கன்டைல் பேங்கிலயும், மல்லபுரம் ஐ.டி.ஐ.யை லெட்சுமி விலாஸ் பேங்கிலயும் வச்சிருக்காங்க. ராஜபாளையம் வாசன் நாடார், மதுரை சிங்காரவேலு சொத்துகளை மட்டும் சங்கத்தில் சேகரிச்சுகிட்டு, அவங்களை நடுத்தெருவில் விட்டுட்டாரு. நாகர்கோவில் பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுதநாடார்- லெட்சுமி தாயம்மாள் கல்லூரியை தனிப்பட்ட ஒருவருக்குத் தாரைவார்த்தது, நாகர்கோவில் பழவிளையில் கல்லூரி கணக்குகளை கரிக்கோல்ராஜ் வீட்டு முகவரியில வச்சுகிட்டு, அவர் மனைவியின் சொந்த பிசினசுக்கு லோன் வாங்கினது. வாசன் -சேர்மத்தாய்  கல்லூரியை அடமானம் வச்சதைக் கேள்விப்பட்ட, அதன் நிறுவனர் வாசன் அதிர்ச்சியில் இறந்துபோனார். அருப்புக்கோட்டையில் விவசாய ஆட்டுப்பண்ணை வச்சு அதிலயும் ஊழல்.. கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட நாடார் மகாஜன சங்கத்தின் பல சொத்துக்களை கரிக்கோல் ஆளுங்க அழிக்கப் பார்க்கிறாங்க... இப்படி பல குற்றச் சாட்டுகளைச் சொல்லமுடியும். 

சங்க விதிப்படி ஒருவருக்கு ஒருமுறைதான் பதவி. இவர் மட்டும் 12 வருசமா பொதுச்செயலாளர். 2 வருசமாகியும், புதிய நிர்வாகிகளைக் காட்டி பதிவு செய்யலை. சங்கக் கணக்குகளைக் காட்டுறதில்லை. எதையும் மினிட் புக்கில் ஏத்துறதில்லை. காரணம் கேட்குறவங் களை சங்கத்தை விட்டே நீக்குறது தொடர்ந்தது. இப்போ, பூனைக்கு மணி கட்ட நாடார் சமுதாயமே திரண்டுருக்கு.  சமுதாய இளைஞர்கள் களமிறங்கி, அண்ணன் சரத்குமார் ஆசியோட சங்கத்தை கைப்பத்தியிருக்கோம். இதை அரசியலாக்கப் பார்க்கிறாரு கரிக்கோல்.  விருதுநகரில் (போட்டி) பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி என்னை பொதுச்செயலாளரா தேர்ந்தெடுத்தாங்க. இதுக்கான ஆதாரங்களோட சங்கத் தலைமை அலுவலகத்துக்குள்ள போனோம். கரிக்கோல் தரப்பு புகாருக்கு போனதால், சங்கத்துக்கு போலீஸ் சீல் வச்சிட்டாங்க'' என பேசிக்கொண்டே போனார், ஜோயல். 

சங்கத்தின் மூத்த நிர்வாகிகளோ, சரத் தலையீட்டில் அரசியல் இருப்பதாக  உறுதிபட கூறுகிறார்கள். மதுரை சிம்மக்கல் நாடார் இளைஞர் பேரவை தலைவர் ஆர்.வி.டி. ராமையா, ""அரசியல் பண்றதுக்காக, முதலமைச்சர்கிட்ட நல்ல பெயர் வாங்கிறதுக்காக, சரத், தன் கட்சி நிர்வாகிகளை வச்சு வம்புக்கு இழுக்கிறாரு. ச.ம.க. மாநாட்டுக்கு நிதி கேட்கப்போன அந்தக் கட்சிக்காரங்ககிட்ட, சரத்தைப் பத்தியும் கரிக்கோல் அண்ணன் திட்டினதாவும் அதுக்குப் பதிலடியா அண்ணனுக்கு எதிரா சரத், பின்னணியில் இருந்து பிரச்சினை செய்றதாவும் சொல்றாங்க. என்னைப் பொறுத்தவரை சமுதாயமும் சங்கமும் நல்லா இருக்கணும்'' என்றார் ஆதங்கத்தோடு. 

இதற்கிடையில், கரிக்கோல்ராஜ் தரப்பில், அமைச்சர் ஓ.பன்னீரைச் சந்தித் துப் பேசியதாகவும், அப்போது பன்னீர்,’’ சரத் மே(லி)டத்தின் ஒப்புதலோடு செயல் படக் கூடியவரு  என உஷாராக ஒதுங்கிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். 

கரிக்கோல் ராஜிடம் கேட்டதற்கு,’""நாங்க விதிப்படிதான் பதவிக்கு வந்தோம். தேர்தலில் நியாயமா ஜெயிச்சா, நானே வழிவிடுறேன். வெளிநாட்டுக்குப் போவது என் தனிப்பட்ட விஷயம். கூலிப்படையோடு சேர்ந்து ச.ம.க.காரங்க சங்க ஆபீசில் உட்கார்றதை எப்படி அனுமதிக்க முடியும்? சீல் விவகாரத்தில், சரத்தின் தலையீடு இருப்பது உறுதி. சென்னையில் இருந்து வந்த உத்தரவாலதான், சீல் வச்சோம்னு போலீஸ் அதிகாரிகளே சொல்றாங்க. இந்த பிரச்சினை பற்றி, ஓ.பன்னீரைச் சந்தித்தது உண்மைதான். ஆனா, அவரு, ’லோக்கல் அமைச்சரைப்(செல்லூர் ராஜு) பார்த்து, சி.எம்.கிட்ட விசயத்தைக் கொண்டுபோங்க. நானும் விசாரிக்கிறேன்’னு சொன்னார்'' என்றதோடு, நிறுத்திக்கொண்டார். அதேசமயம், ஜெ.வுக்குத் தெரிந்துதான் சரத் செயல்படுகிறார் என ஓ.பன்னீர் சொன்னதாக வந்த தகவலை, கரிக்கோல்ராஜ் மறுக்கவும் இல்லை. 

ச.ம.க. தலைவர் நடிகர் சரத்குமாரிடம் கேட்டதற்கு, ""அந்த சங்கத்தில் நீண்டகாலமாக உறுப்பினராக இருக்கும் சிலர், எங்கள் கட்சிப் பொறுப்புகளில் இருக்கலாம். சங்கத்தில் அவர்களுக்கு என்ன பிரச்சினையோ எனக்குத் தெரியாது. மற்றபடி, இதில் எங்கள் மீது சுமத்தப்படும் கற்பனையான குற்றச்சாட்டுகளுக்கு, கருத்துக்கூற நான் விரும்பவில்லை. தொகுதிப் பணிகளையும் கட்சிப் பணிகளையும் கவனிக்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது''’ என்றார் சுருக்கமாக. 

சாதிச்சங்கத்தால் சாதனை படைத்தவர்கள் என எடுத்துக்காட்டப்படும் நாடார் சமுதாயத்துக்கு, அதே சாதிச் சங்கத்தால் நெல்லை, மதுரை என சோதனை கள் தொடர்கின்றன!   

ad

ad