புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2013

நான் போட்டியிட மாட்டேன்: ம.தி.மு.க. போட்டியிடும்: வைகோ பேட்டி
விருதுநகரை அடுத்த சூலக்கரை பகுதியில் தனியார் நூற்பாலை அருகே கரிசல்காட்டு பகுதியில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது. 
இதில் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்: காமராஜர் பிறந்த பூமியில் அண்ணா பிறந்த நாள் விழா மாநில மாநாடு வருகிற செப்-15ம் தேதி நடைபெற இருக்கிறது.
இம்மாநாட்டில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதிமுகவினர் லட்சக்கணக்கானோர் பங்கேற்க இருக்கிறார்கள். அதோடு, இந்த மாநாடு கழக உயர்நிலைக் குழு உறுப்பினரான ஜெபராஜ் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் கவனித்து வருகிறார். இதற்கான பணிகளை கடந்த 1-ம் தேதியே தொடங்க இருந்த நிலையில், மாநாட்டிற்கான அனுமதி கடந்த 3-ம் தேதிதான் மாவட்ட காவல் துறை வழங்கியது.
மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமலும், நெரிசலை ஏற்படுத்தாத வகையிலும் 4 வழிச்சாலையில் இருந்து 1000 அடி தள்ளியே மாநாட்டிற்கு பந்தல் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதிமுகவின் வெற்றிக்கும், அதிமுக-திமுகவிற்கும் மாற்று அரசியலுக்கான நுழைவு வாயிலாக இம்மாநாடு அமையும். 
மேலும், இதில் அனைத்து மக்களின் வாழ்வாதரங்களை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழல், முல்லைப்பெரியாறு, நதிகளை இணைக்கவும், நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும்  உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும், இந்த மாநாடு ம.தி.மு.க.வுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்தும். விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் ம.தி.மு.க. போட்டியிடும் என தெரிவித்தார்.

ad

ad