புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2013

விருந்துபசார நிகழ்வு என்னும் பெயரில் தேர்தல் கூட்டம் நடத்திய ஈ.பி.டி.பியினர்!- தடுத்து நிறுத்திய தேர்தல் கண்காணிப்பாளர்கள்
கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் உத்தரவில் விருந்துபசாரம் என்னும் பெயரில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் கிளிநொச்சி முல்லைத்தீவில் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றுக் கொண்டவர்களை கட்டாயப்படுத்தி அவர்களைக் கொண்டு விருந்துபசாரம் என்னும் பெயரில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றை நாடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்தனர்.
இதனால் நேற்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற இந்த விருந்துபசார நிகழ்விற்கு விருந்தினர்கள் செல்வதற்கு முன்னர் பொலிஸாரும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பா.உ சந்திரகுமார் தன்னுடன் அழைத்துச் செல்லவிருந்த வடமாகாண தேர்தல் வேட்பாளரை இடைநடுவில் கைவிட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஆயினும் இறுதிவரை நிகழ்வில் கலந்து கொண்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஆற்றிய உரைகள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு சென்றனர்.
இதனால் பா.உ சந்திரகுமார் கூட்டமைப்பினர் மீது கடுப்பாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை பா.உ சந்திரகுமார் தொடர்ச்சியாக தேர்தல் வன்முறைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட கூட்டமைப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

ad

ad