புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2013


நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு! துன்பங்களை வெல்வதுதான் வாழ்வின் சுவை! ஜெயலலிதா பேச்சு!
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகரப்புற வசதித்துறை அமைச்சருமான ஆர்.வைத்தியலிங்கம் மகன் பிரவுக்கும், மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மகன் கே.பி. சிவசுப்பிரமணியனுக்கும் திருமணம் நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா,


அறநெறிப்படி வாழ்பவர் வாணுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம்.
சாதகம், பாதகம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் துன்பங்களே வரக்கூடாது என்று நினைப்பது கோழைத்தனம். துன்பங்களை எதிர்கொண்டு அவற்றை வெல்வதுதான் வாழ்வின் சுவை. இருட்டு இருந்தால்தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால்தான் அதன் முழு பலனை நாம் உணர முடியும். வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவை எண்ணங்கள். 
கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அதுபோல் சிந்தனை இல்லாவிட்டால், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. சிலர் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாகி, மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தை போக்கி துணிச்சலுடன் செயல்பட்டால், வாழ்வில் வெற்றி நிச்சயம். 
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. 
ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும். 
தாழ்வு மனப்பாண்மையை விலக்கிவிட்டு துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால், உங்களால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை. வலிமை, வாழ்வை வாணளவிற்கு உயர்த்தும். நம்பிக்கையை துணைகொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் சந்திக்காத சோதனைகளா. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் தலைமை பொறுப்பை ஏற்ற நான் சந்திக்காத சோதனைகளா. என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த எத்தனை சதி திட்டங்கள் தீட்டப்பட்டன. எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டன. எத்தனை மிரட்டல்கள், எத்தனை உருட்டல்கள், இவற்றையெல்லாம் நான் துணிச்சலுடன் எதிர்கொண்டததால்தான் மூன்றாவது முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறேன். 
முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களிடம் உள்ள தாழ்வு மனப்பாண்மையை போக்கி தன்னம்பிக்கையை வளர்த்தால், எந்தப் பிரச்சனையையும் நீங்கள் சமாளித்துவிடலாம். இவ்வாறு பேசினார்.

ad

ad