புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2013

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மாற்று சக்தியின் ஆட்சி - மு.கா.கவலை

நாடு முழுவதிலும் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் மாற்று சக்தியொன்றின் ஆட்சியே செயற்பட்டுவருகின்றது. இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற முஸ்லிகளின் ஒன்றியம் மெளனித்து கிடக்கின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அதிருப்தியையும் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது.

ஜனநாயகம் என்பது பெயரளவில் மாத்திரமே இருந்துவருகின்றது. தெற்கில் இடம்பெற்றுவருகின்ற முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை மற்றும் தாக்குதல்கள் வெளிப்படையாக இருக்கின்ற அதேவேளை, வடக்கில் எவ்வாறு இடம்பெற்றிருக்கும் என்பதை முஸ்லிம்களால் ஊகித்துக்கொள்ள முடிகின்றது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் எம்.பி.யுமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
ஹஸன் அலி எம்.பி. மேலும் கூறுகையில்,
கிராண்ட்பாஸ் சுவர்ணசயித்திய வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலானது இதுவரையில் நாடு முழுவதிலும் இடம்பெற்றுள்ள பள்ளிவாசல்கள் மீதான 23ஆவது தாக்குதலாகும். இது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்கின்ற அதேவேளை, எமது காங்கிரஸின் சார்பில் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இத்தகைய தாக்குதகளானது நாட்டில் கூறப்படுகின்ற இன ஐக்கியத்துக்கு பங்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது தெளிவாக தெரிந்திருக்கின்றபோதிலும் அது குறித்து கவனம் செலுத்த வேண்டியவர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மேலும் பாராளுமன்றத்தை சார்ந்து இயங்குகின்ற பாராளுமன்ற முஸ்லிம்கள் ஒன்றியம் வாய் திறக்காது மெளனித்திருக்கின்றது. இந்த நிலைமைகள் தொடர்பில் ஒன்றியம் இறுக்கமான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் வெளிப்படையானவைகளாக இருக்கின்ற நிலையில்தான் இந்நாட்டில் ஜனநாயகமும் இருப்பதாக கூறப்படுகின்றது. ஜனநாயகம் இருப்பதாக கூறப்படுவதில் எமக்கு சிறிதளவும் நம்பிக்கைகிடையாது. தெற்கிலே இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றதை பார்க்கையில் வடக்கில் நடத்தப்படட தாக்குதல்கள் எவ்வாறு மூடிமறைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு எந்தளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்ற என்பதை இப்போது முஸ்லிம்களால் உணரக்ககூடியதாக இருக்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் தாக்குதல்கள் பின்னணியில் பாரியதொரு மாற்று சக்தி செயற்பட்டு வருகின்றது என்பது மட்டும் திண்ணமாகின்து என்றார்.
அஸ்வர் எம்.பி.
கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் கருத்து ெவளியிட்ட ஆளும்கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் கூறுகையில்,
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. அதேபோன்று அதற்கான அதிகாரத்தை எவராலும் வழங்கவும் முடியாது. எனினும் கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் நாம் கவலையையும் கண்டத்தையும் தெரிவிக்கின்றோம். மேலும் கிராண்ட்பாஸ் சம்பவத்தையடுத்து பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்காவிட்டால் அங்கு விபரீத நிலையொன்றுக்கு வழிவகுத்திருக்கும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
குறித்த பள்ளிவாசலானது நோன்பு பெருநாள் நிறைவு பெற்றதன் பின்னர் மூடப்படும் என்றே முதலில் கூறப்பட்டிருந்தது. எனினும் இவ்விடயம் தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பள்ளிவாசலை மூடுவதற்கான தேவை இல்லையென தெரிவிக்கப்பட்டதையடுத்து குழப்பம் எழுந்துள்ளது. பள்ளிவால்களை பாதுகாக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். அதனை நாம் செய்துவருகின்றோம். அதேவேளை, பாதுகாப்பு தரப்பினரும் இதில் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.
இஃதிகாப் என்ற வழிபாட்டு முறையானது பள்ளிவாசலில் மட்டுமே சாத்தியமாகும். அதனை வெளியில் செய்ய முடியாது. இதன்மூலம் பள்ளிவாசலில் முக்கியத்துவம் விளங்கப்பட வேண்டும். அது மாத்திரமின்றி பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது என்பது போல் அதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கும் யாருக்கும் உரிமைகிடையாது.

எனவே, இவ்விடயங்களில் அரசாங்கம் இறுதியானதோ முடிவினை எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. கிராண்ட்பாஸ் சம்பவத்தையடுத்து ஜனாதிபதி நேரடி தலையீடுகளை மேற்கொண்டிருந்தமை வரவேற்றக் கூடியதாகும். இது இவ்வாறிருக்க இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் முஸ்லிம் நாடுகள் பங்கேற்பதை தடுப்பதற்காகவே சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றன. இதனையும் ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

ad

ad