புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2013

வேலூர் கோர்ட்டில் நளினியால் பரபரப்பு! - நாம் தமிழர் நிர்வாகியை தூக்கிச் சென்றனர் பொலிசார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயிலில் செல்போன் பயன்படுத்திய வழக்கில் வேலூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நோக்கி ஓடிச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. 

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, அறையில் 2010ம் ஆண்டு ஏப்ரல் 20ந்தேதி போலீசார் சோதனை நடத்தி ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று பிற்பகல் 11.50 மணியளவில் நளினி தொரப்பாடியில் உள்ள வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் இருந்து கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார். பாதுகாப்பு கருதி அந்த நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பகல் 12.10 மணிக்கு நளினி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 1ல் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை மாஜிஸ்திரேட்டு மும்மூர்த்தி விசாரித்தார்.

நளினி சார்பில் வக்கீல் புகழேந்தி, அரசு தரப்பில் பாசி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மாஜிஸ்திரேட்டு வழக்கின் விசாரணையை 19ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறினார். மேலும் சாட்சி விசாரணையின்போது நளினி கட்டாயம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் மற்ற நேரங்களில் ஜெயிலில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணையில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.10 நிமிடத்தில் வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து பகல் 12.25 மணிக்கு நளினி திரும்பவும் பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நளினி தரப்பில் ஆஜரான வக்கீல் புகழேந்தி கூறும்போது, குற்றம் குறித்து நீதிபதி கேட்ட கேள்விக்கு, நளினி இது உண்மை இல்லை என்று பதில் அளித்தார். கோர்ட்டு விசாரணையில் நேரடியாக ஆஜராகவே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். 19ந்தேதியும் நளினி கோர்ட்டில் ஆஜராவார்என்றார்.

மற்ற வழக்குகளில் ஆஜராக கோர்ட்டுக்கு வந்தவர்களும் நளினியை பார்க்கும் ஆவலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நளினி கோர்ட்டுக்கு வந்தபோதும், விசாரணை முடிந்து சென்ற போதும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோர்ட்டில் திடீரென்று ஒருவர் நளினியை நோக்கி வேகமாக ஓடிவந்தார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது அவர் நான், நாம் தமிழர் கட்சி நிர்வாகி என்றும், நளினியை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கி கோர்ட்டு வெளியே விட்டனர். 

ad

ad