புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2013





       ""ஹலோ தலைவரே...…பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக்கட்ட வாதத்திற்கு வந்தி ருப்பதைப் பார்த்து வக்கீல்களே ஆச்சரியப்படுறாங்க.''

""17 வருட வழக்காச்சே.. இறுதிக்கட்டம் நோக்கி வருதுன்னா ஆச்சரியத்தோடு பரபரப்பு, பதட்டம், எதிர்பார்ப்பு எல்லாமும் இருக்குமே.''…


""குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஜெ. தரப்பில் என்ன ரியாக்ஷன்னு விசாரித்தேன். அவங்க வக்கீல்கள் ரொம்ப  கூலாக இருக்காங்க. வழக்கமா வாதாடும் வக்கீல்கள்தான் இறுதிக்கட்ட விசாரணையிலும் ஆஜராகப் போறாங்களாம். நீதிபதி பாலகிருஷ்ணன் செப்டம்பர் 30-ந் தேதியுடன் ரிடையர்டாகிறார். அதற்குள் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்து தீர்ப்பளிக்கப்படுமாங்கிற  எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்குதுங்க தலைவரே..''

""வழக்கின் நிலை பற்றி  ஜெ. தரப்பு வக்கீல்கள் என்ன  சொல்றாங்க?''


""அவங்க தரப்பில் 99 பேர் சாட்சியமளிச்சிருக்காங்க. அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள், சினிமாகாரர்கள், சிவாஜி குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், பொதுப் பணித்துறை இன்ஜினியர்கள், ஆடிட்டர்கள், வளர்ப்பு மகன் திருமணத்தில் என் செலவில் தான் வாழைமரம் கட்டினேன், நான்தான் சமையலுக்குத் தேங்காய் சப்ளை பண்ணி னேன்னு இப்படிப் பலரும் சாட்சியளிச்சிருக் காங்க. வருமானத்துக்கு அதிகமா 66 கோடி ரூபாய் சொத்து குவிச்சதாகத்தான் ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் இந்த 4 பேர் மீதும் கேஸ் நடக்குது. 99  பேரோட சாட்சியத்தின் மூலமா 56 கோடி ரூபாய் அளவுக்கு தவறான மதிப்பீட்டுடன் வழக்குப் போடப்பட்டிருக்குன்னு கோர்ட்டில் எடுத்துச் சொல்லியிருப்பதா ஜெ. தரப்பு வக்கீல்கள்  சொல்றாங்க.'' 

""அப்படின்னா மிச்சமிருக்கும் 10 கோடி ரூபாய் சொத்து? மாதத்துக்கு 1ரூபாய் மட்டுமே ஜெ. சம்பளம் வாங்கிய காலத்தில் எப்படி இந்த சொத்து வந்ததுன்னு கேள்வி வருமே?''

""ஜெ. தரப்பு வக்கீல்களைக்  கேட்டால், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் 13டி  பிரிவின்படி, வழக்கில் காட்டப்படும் தொகையில் 25% அளவிற்கு விலக்கு உண்டாம். நிரூபிக்கலைன்னாலும் கேஸ் நிற்காதாம். 56 கோடி ரூபாய் சொத்துகள் தவறான மதிப்பீடுன்னு எடுத்துச் சொல்லி யிருப்பதால் மீதித் தொகை பற்றி பெரியளவில் சிக்கல் இல்லைன்னு சொல்றாங்க. சாதகமான தீர்ப்பு வரும் நாளை உற்சாகமா எதிர் பார்த்துக்கிட்டிருக்கோம்னு சொல் றாங்க.''

""அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தரப்பு என்ன சொல்லுது?''


""அவர் பொதுப்பணித்துறை இன்ஜினியர் களிடம் குறுக்கு விசாரணை செய்தப்ப, எங்க சூப்பிரண்டெண்ட் இன்ஜினியர் கையெழுத்துப் போடச் சொன்ன இடத்தில் கையெழுத்துப் போட்டோம்னு சொல்லியிருக்காங்க. அப் படின்னா, நீங்க உண்மையான சாட்சிகள் இல்லைன்னு சொன்ன அரசு வக்கீல், உங்களை மிரட்டி சாட்சியளிக்கக் கூட்டிட்டு வந்திருக் காங்கன்னு வாதாடியிருக்காரு. அந்த சூப்பிரண் டெண்ட் இன்ஜினியர் இப்ப எங்கே இருக் காருன்னே தெரியலையாம். அதுபோல, சாட்சிகளா விசாரிக்கப்பட்ட ஆடிட்டர்களையும் பவானிசிங் குறுக்கு விசாரணை செஞ்சாரு. அதில் பல ஆடிட்டர்கள் ஏற்கனவே ஜெ.வாலேயே புகார் தெரிவிக்கப்பட்டவங்கங்கிற விஷயமும் தெரிய வந்திருக்குது. முக்கியமான ஆடிட்டர்னு சொல்லப்படும் சுந்தரவேலன் சாட்சியத்திலும் குளறுபடிகள் இருப்பதையும் பவானிசிங் சுட்டிக்காட்டியிருக்காரு.''

""ஓ… இப்படிப்பட்ட சூழலில்தான் இறுதிக் கட்ட விவாதங்கள் நடக்கப் போகுதா?'' 


""அரசு வக்கீல் பவானிசிங், இந்த கேஸ் பற்றி டீடெய்லா படிக்க வேண்டியிருக்குன்னும் அதனால 15 நாள் டயம் வேணும்னும் கேட்டார். அதனால நீதிபதி பாலகிருஷ்ணன், ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் முதலில் வாதாட அனுமதி கொடுத்திருக்கிறார். எந்த வழக்கிலும் அரசுத் தரப்புதான் முதலில் வாதாடும். அப்புறம்தான் குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு வாதாடும். இந்த வழக்கத்திற்கு மாறா ஸ்பெஷல் கோர்ட்டில் ஜெ. தரப்பு முதலில் வாதாடப்போகுது. இதையும்கூட அவங்க வக்கீல்கள் பாசிட்டிவ்வாகத்தான்  பார்க்குறாங்க.'' 

""வழக்கை ஜெ. எப்படி பார்க்கிறாராம்?''


""இந்த வழக்கு தன்னோட அரசியல் எதிர் காலம் சம்பந்தப்பட்ட வழக்குங்கிறதால ஆரம்பத் திலிருந்தே அவர் இதை கவனமாகத்தான் பார்த்துக் கிட்டிருக்கிறார். இந்த  வழக்கை வைத்துதான் சிலர் சதி செய்வதா சொல்லி மன்னார்குடி குடும்பத்தினரை கார்டனி லிருந்து  வெளியேற்றி, கட்சியிலிருந்து கட்டம் கட்டி, கைது நடவடிக்கை வரை போனார். பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் சாட்சி விசாரணைகள் நடந்தப்பவே, ஜெ.தான் தன் வக்கீல்களிடம் இன்னின்ன கேள்விகளைக் கேட்கணும்னு நோட் பண்ணிக் கொடுத்தாராம். அதை மீறி புதுசா கேள்வி கேட்ட வக்கீல்கள் வாங்கிக் கட்டிக்கிட்டாங் களாம். சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடர்பா  இதற்கு முன்னாடி உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் இங்கெல்லாம் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஜெ. ரொம்ப கவனமா படிச்சி, இறுதிக் கட்ட வாதத்திற்கான பாயிண்ட்டுகளை நோட் பண்ணி வக்கீல்கள்கிட்டே சொல்லிக்கிட்டிருக்காராம். செப்டம்பரில் தீர்ப்பு வரும்னு ஜெ. தரப்பில் எதிர்பார்ப்பு இருக்குது.''

""அதற்குள் இருதரப்பு விவாதங்களும் முடிஞ்சிடுமா?''


""முடிஞ்சிடணும்னு கொடநாடு வட்டாரத்தில் எதிர்பார்ப்பு இருக்குது.. … சிம்மராசிக்காரரான ஜெ.வுக்கு இரண்டாம் இடத்தில் உள்ள சனி, செப்டம்பரில் விலகுதாம். அப்படி விலகும் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்னும் சனியின் உக்கிரத்தைக் குறைக்க 48 நாட்கள் குளிர்ச்சியான மலைப்பகுதியில் இருக்கணும்னும் ஜோசியர்கள் சொன்னதால் கொடநாட்டில் அரசுப் பணிகளை கவனிக்கிறார் ஜெ. அங்கே பல பரிகார பூஜைகளும் நடந்திருக்குது. சனியின் தாக்கத்தைத் தடுக்கக்கூடிய சக்தி பிள்ளையாருக்கு உண்டுன்னும் ஜோசியர்கள் சொல்லியிருக்காங்க. அதனாலதான் முதுமலையில் யானைகளுக் குப் பழங்கள், வெல்லமெல்லாம் கொடுத்திருக்கிறார் ஜெ. அப்ப, காவேரி யானை அவரை லேசாக முட்டித்தள்ள பரபரப்பாயிடிச்சி. இதனால் ஜெ. அப்செட்டாக, இதனை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம்னு ஜோசியர்கள் வட்டாரம் யோசனை பண்ணிக்கிட்டிருக்காம்.''

""ஜோசியர்களைப் பற்றி சொன்னதும் எனக்கொரு துயர சம்பவம் ஞாபகத்துக்கு வருதுப்பா.. தமிழக மின்துறை வட்டாரத்தில் பவர்கிங்னு சொல்லப்பட்டவர் பி.ஜி.ஆர் குழுமத் தலைவர் பி.ஜி.ரகுபதியோட மரணம்தான் அந்த துயர சம்பவம். அடிமட்டத்தி லிருந்து  தன்னோட கடுமையான உழைப்பால் நல்ல நிலைக்கு வந்த முதல் தலைமுறை தொழிலதிபர் ரகுபதி. ஷேர்மார்க்கெட்டிலும் பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு நல்ல நிலைமை. எளிமையான மனிதர். அம்பானி போல வளரணும்ங்கிறது தான் ரகுபதியோட லட்சியம். ஆனா சில ஆண்டுகளா அவருக்கு உடலில் ஒருவித சோர்வு இருந்திருக்கு. அவரோட டாக்டர் அறிமுகப்படுத் திய  ஜோதிடர்  ஒருத்தர், உடம்பில் ரத்தரீதியான பிரச்சினைகள் இருக்க லாம்னு சொல்லியிருக் காரு. ஆனா இன்னொரு ஜோசியரோ, நீங்க 79 வயசு வரைக்கும் நல்லா இருப்பீங்க. எந்தப் பிரச் சினையும் இல்லைன்னு சொன்னாராம். அதை நம்பி பி.ஜி.ஆரும் சும்மா இருந்துட்டாரு.''

""உடல்நிலையை கவனிக்கலையா?''


""ஜனவரியில் ரொம்ப சோர்வானதும்தான் பிரபல டாக்டரைப்  பார்த்திருக்கிறார். அப்ப தான், பி.ஜி.ஆருக்கு ரத்தப் புற்றுநோய்னும் லெவல் அதிகமா இருக்குன்னும் டெஸ்ட்டில் தெரிஞ்சிருக் குது. இந்தியாவில் மட்டு மில்லாமல், சைனா, சிங் கப்பூர்னு ட்ரீட்மெண்ட் டுக்குப் போனாங்க. சிங்கப்பூர்  டாக்டர்கள் கிட்டே பி.ஜி.ஆர். குடும்பத்தினர், நாங்க வெற்றுக் காசோலை தர்றோம். எவ்வளவு பணம் வேணும்னாலும் நீங்க எழுதிக்குங்க. உயிரைக் காப்பாற்றிட்டா போதும்னு சொல்லியிருக்காங்க. ஆனாலும் நோய் முற்றிவிட்டதால பி.ஜி.ரகுபதியைக் காப்பாற்ற முடியலை.'' 

""எவ்வளவு பணம், நிறுவனம், ஆள்பலம், உழைப்பு, மக்கள் செல்வாக்கு இருந்தாலும் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியது ரொம்ப அவசியம்ப்பா..''

""ஆமாங்க தலைவரே… அமைச்சரா இருக்கும்போதே இறந்தவர் மக்களின் அன்பைப் பெற்ற நாஞ்சி லார். ஒவ்வொரு வருட மும் ஆகஸ்ட் 1-ல் அவ ரோட நினைவு நாளை அவர் மீது அன்புள்ள கட்சித் தொண்டர்கள் கடைப்பிடிப்பாங்க. இந்த ஆண்டு நாஞ்சிலாரின் மனைவியும் இறந்துட்ட தால வழக்கமான  நிகழ்ச்சி கள் இல்லை. ஆனா, நாஞ்சிலாரின் நினைவிடத் தில் பலரும் மலர்வளையம் வச்சிட்டு வந்தாங்க. அதே போல, தங்கபாண்டியனும் அமைச்சரா இருக்கும் போதே இறந்துபோனவர். அவர் நினைவா ஜூலை 31-ந் தேதி அவர் மகனும் முன்னாள் அமைச்சரு மான தங்கம் தென்னரசும், மகள் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனும் ஏற்பாடு செய்த அமைதி ஊர்வலத்தில் கட்சிக் காரர்களோடு மு.க.அழகிரி யும் அவரோட ஆதர வாளர்களும் கலந்துக்கிட்டாங்க.''



""சமீபத்தில் அழகிரி கலந்துகொண்ட கட்சிக் காரர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு இதுவாகத் தான் இருக்கும்,…ஏதாவது முக்கியத் தகவல் உண்டா?''

""அதை நான் சொல்றேன்... ஊர்வலத்தில் அழகிரி கலந்துக்கிட்டு கிளம்பியதும் அவரோட ஆதரவாளர்கள் அவங்களுக்குள்ளே பேசிக்கிட்டு இருந்திருக்காங்க. அ.தி.மு.க. ஆட்சி முடியிற வரைக்கும் அமைதியாவே இருப்போம். எம்.பி. எலெக்சன் வேலைகளை அவங்க ஆட்கள் பார்த்துக்கிடட்டும்.  நம்ம  அண்ணன் ஆட்களெல்லாம் கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறதுதான் நல்லதுன்னு பேசிக் கிட்டாங்களாம்.''


 லாஸ்ட் புல்லட்!

வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான திருக்குறள் முனுசாமியின் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் தொடங்குகிறது. திருக்குறளாரின் பேரன் ராஜூ, கனிமொழி ஆதரவில் தி.மு.க.வில் சேர முடிவெடுத்திருப்பதால், திருக்குறள் முனு சாமியின் நூற்றாண்டு விழாவைக் கனிமொழி ஆதரவு தி.மு.கவினர் கொண்டாடவிருக் கிறார்கள். புதுக்கோட்டையில் மா.செ.வுக்கு எதிர்த்தரப்பாக இருப்பவரின் குடும்ப திருமண விழாவிலும் கனிமொழி  கலந்துகொள்ள விருக்கிறாராம்.

ஆசிரியர் தேர்வு வாரிய சேர்மன் பதவியிலிருந்து சௌத்ரி மாற்றப்பட்டு, விபுநாயர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மத்திய அரசு பணிக்குச் செல்லும் சௌத்ரி மீது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித் தேர்வில் இடஒதுக் கீட்டைக்  கடைப்பிடிக்கவில்லை என்பது உள்ளிட்ட புகார்கள் குவிந்து, வழக்குகளும் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் நடந்த பி.ஜி. அஸிஸ்டெண்ட் போஸ்டிங்கிற் கான தேர்வில், மேலிடத்தின் சிபாரிசின் அடிப் படையில் தேர்வானவர்களின் பட்டியலைத் தயாரிக்க சௌத்ரிக்கு உத்தரவிடப்பட்டதாம். ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் புதிய சிக்கலுக்கு சௌத்ரி உடன்படாததால்தான் இந்த மாற்றமாம்.

ad

ad