புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013





         ""ஹலோ தலைவரே... சொத்துக் குவிப்பு வழக்கு எதிர்பாராத திருப்பங்களோடு போய்க்கிட்டிருக்குது.. ஜெ. செம டென்ஷனில் இருக்கிறாராம். அரசு வக்கீல் பவானிசிங் மாற்றப்பட்டதால் ஜெ. தரப்பு ரொம்ப டிஸ்டர்பாகியிருக்குது.''

""அரசு வக்கீல் மாற்றப்பட்டதற்காக குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்குப் போடுவதே புதுமையாகத்தானே இருக்குது.. அது இருக்கட்டும். கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா இந்த வழக்குக்காகத்தான் திரும்பவும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்னு அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்ததே ஞாபகமிருக்கா?''

""நல்லா இருக்குப்பா.. வழக்கு விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில், சசிகலாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?''


""அது வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தது. ஆனா, கார்டனைப் பொறுத்தவரை ஜெ.வுக்கும் சசிகலாவுக்குமான பழைய நல்லுறவு மீண்டும் பலமாகியிருக்குதாம். ஆகஸ்ட் 18-ந்  தேதி சசிகலாவுக்குப் பிறந்தநாள். ஜெ. முன்னிலையில் கோலாகலமா கொண்டாடப்பட்டு ஸ்பெஷல் பூஜை நடத்தப்பட்டு, விருந்து, அன்பளிப்புன்னு கார்டன் ஆட்களுக்குக் கொடுத்திருக்காங்க. இந்த நல்லுறவைக் கட்டிக்காப்பதில் சசிகலா ரொம்ப அக்கறையாவும் கவனமாகவும் செயல்படுறாராம். தன்னோட உறவுகள் விஷயத்தில், ஜெ.வின் மனநிலையறிந்து பக்குவமாகத்தான் முடிவெடுக்கிறாராம்.'' 

""அரசியல் விஷயங்களிலும், ஆட்சி நிர்வாகத்திலும்கூட சசிகலாவின்  நிலை இதுதானா?''


""அரசு மட்டத்தில் ஜெ.வுக்குத் தெரியாமல் எந்த தலையீட்டையும் சசிகலா இப்ப செய்வ தில்லைன்னு கார்டன் வட்டாரம் சொல்லுது. உறவினர்களையும் ரொம்ப  நெருங்க விடுவதில்லை யாம். இளவரசிகிட்டே மட்டும் தான் பேச்சு வார்த்தை. அவர் மூலமாகத்தான் ஜெ.ஜெ.டி.வி. பாஸ்கரன் ஜெயிலில் மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறாருங்கிற தகவல் தெரியவர, அதை ரொம்பத் தயங்கித் தயங்கி ஜெ. கவனத்துக்குப் பக்குவமா கொண்டு போயிருக்காரு சசிகலா. அதற்கப்புறம்தான், பாஸ்கரனோட பெயில் விஷயம் சாதகமாகியிருக்கு. அதேநேரத்தில் எம்.நடராஜன், திவாகரன், ராவணன் விஷயங்களில் ஜெ. செம கோபமா இருக்காருங்கிறதை சசிகலா புரிஞ்சுக்கிட்டதால அவங்க மேலே போடப்பட்டிருக்கிற கேஸ்களில் தலை யிடுறதில்லையாம். கணவர் நடராஜன், ஒரே  தம்பி திவாகரன் இவங்களுக்காகக் கூட சசிகலா நெருக்கடி கொடுப்பதில் லைன்னு கார்டன் ஆட்களே ஆச்சரியமா சொல்றாங்க. தனக்கு வேண்டிய வங்களை நெருங்கவிடலைன்னாலும் தனக்கு வேண்டாதவங்களையும் சசிகலா விட்டுவைப் பதில்லைங்கிறதையும் கார்டன் ஆட்கள் சொல்றாங்க.''

""அப்படி யார் யார் இருக்காங்க?''

""பெரிய லிஸ்ட்டே இருக்காம். தன்னைக் கார்டனிலிருந்து வெளியேற்று வதற்கு கட்சியிலும் நிர்வாகத்திலும் யார் யாரெல்லாம் காரணமா இருந்தாங்களோ அவங்களுக்கு சைலன்ட்டா வேட்டு வைப்பதில் ரொம்ப தீவிரமா இருக்காராம். பழிவாங்கும் படலமும் ஆரம்பிச் சிடிச்சின்னு சொல்றவங்க, சில உதாரணங் களையும் சொல்றாங்க. உளவுத்துறைக்கும் டி.ஜி.பி.யா இருக்கும் ராமானுஜம்தான் சசிகலாவுக்கும் அவரோட உறவினர்களுக்குமான அப்போதைய பேச்சுகளை டேப் பண்ணி ஜெ.வின் பார்வைக்குக் கொண்டு போனாரு. அதனாலதான் கார்டனில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சமீபத்தில் உளவுத் துறையை கவனிக்க கூடுதல் அதிகாரி நியமிக்கப்பட்டி ருக்காரு. இதற்குப் பின்னணியா செயல்பட்டவர் சசிகலாதானாம். உளவுத்துறை ரிப்போர்ட் இப்போ தனி அதிகாரி அசோக்குமார் மூலமா கார்டனுக்குப் போயிடுது. அதுமட்டுமில்லாம, முன்னெல்லாம் டி.ஜி.பி. அனுப்புற போஸ்டிங் லிஸ்ட் அப்படியே க்ளியராயிடும். இப்ப அதில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுதான் ரிலீஸ் ஆகுதாம். ஜெயா  டி.வி நிர்வாகத்திலும் சசிகலாவின் கவனம் பதிஞ்சதால, சைலன்ட் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்குது.''

""அங்கே யார் மேலே பழிவாங்கும் படலம்?''

""ஜெயா டி.வி. செய்திப்பிரிவுக்குத் தலைமை வகித்த கே.பி.சுனில், அப்ப சசிகலா வகையறாக்கள் பற்றி தன்னோட டீம் மூலமா பல  ரிப்போர்ட்டுகளை கலெக்ட் பண்ணி கார்டனுக்கு அனுப்பியிருந்தாரு. இப்ப சுனிலும் அவரோட டீமில்  இருந்தவங்களும் ஜெயா டி.வியிலிருந்து தூக்கப்பட்டுட்டாங்க. இதேபோல சசிகலாவைப் பற்றி மேலிடத்துக்குப் போட்டுக்கொடுத்த மந்திரிகள், மா.செ.க்களும் பழிவாங்கப்படலாம்ங்கிற பேச்சு இருக்கிறதால, சம்பந்தப்பட்டவங்க பீதியில் இருக்காங்க.''

""பா.ஜ.க- தே.மு.தி.க- ம.தி.மு.க.ங்கிற புதுக் கூட்டணிக்கான மூவ் நடப்பதையும் அதற்கு காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதையும் நம்ம நக்கீரன் விரிவா சொல்லியிருந்தது. ஆனா, தமிழருவி  மணியன் மறுப்பறிக்கை கொடுத்திருக்காரே!''

""ஆமாங்க தலைவரே.. அந்த மறுப்பறிக்கையை நல்லா கவனிச்சீங்களா? காங்கிரசையும் தி.மு.க.வையும் தோற்கடிக்கணும், அதை செய்ய வேண்டிய ஜெயலலிதா தன்னோட கூட்டணிக் கட்சிகளை மதிக்கலைன்னும், காங்கிரஸ் பக்கமோ தி.மு.க. பக்கமோ விஜயகாந்த் போயிடக்கூடாதுன்னும், அதனால பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கூட்டணி அமையணும்னும், பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதில் பாவம் எதுவுமில்லைன்னும்,  அதுதான் காந்திய மக்கள் இயக்கத்தின் விருப்பம்னும், எல்லாத் தையும் சொல்லிட்டுத்தான், ஆனா அதற்கான முயற்சிகளில், தான் ஈடுபடலைன்னு தமிழருவி மணியன் சொல்லியிருக்காரு. அதோடு, தன்னோட காந்திய மக்கள் இயக்கத்துக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லைன்னும் சொல்லியிருக்காரு.''

""இந்த ட்விஸ்ட்டுக்கு என்ன காரணமாம்?''

""ம.தி.மு.க வட்டாரத்தில் விசாரிச்சேன்… பின்னணி தெரிஞ்சிடிச்சி. இப்படியொரு கூட்டணிக்கான மூவ் மெண்ட் பற்றி தெரிந்ததும் தமிழருவி மணியன்கிட்டே வைகோ பேசியிருக்காரு. தன் மேலே அக்கறை கொண்டுதான் தமிழருவி இப்படியொரு முயற்சியை எடுக்கிறாருன்னு வைகோ புரிஞ்சிக்கிட்டாலும், இதிலே நீங்க தலையிடாதீங்கன்னு தமிழருவி மணியன்கிட்டே சொல்லிட்டாராம். நான் 20 வருசமா ம.தி.மு.க.வை கஷ்டப்பட்டு நடத்திக்கிட்டிருக்கேன். விஜயகாந்த் இப்ப கட்சி ஆரம்பிச்சவரு. நீங்க விரும்புற மாதிரி  கூட்டணி அமைந்தால்  அந்த கூட்டணிக்கு யார் தலைமை தாங்குறது? தேசிய கட்சியா காங்கிரஸ் இருந்தாலும் தமிழகத்தில் அது கூட்டணி அமைக் கிறப்ப தி.மு.க.தானே தலைமை தாங்குது? அதுபோல சீனியரான ம.தி.மு.க.தான் புதிய கூட்டணிக்குத் தலைமை தாங்கணும். 1996 தேர்தலில் பா.ம.க.வோடு கூட்டணி அமைக்க பேச்சு நடந்தது. ராமதாஸ்தான் கூட்டணிக்குத் தலைமைன்னு சொன்னதால அதில் இடம்பெறாமல் வெளியே வந்தேன். இப்பவும் ம.தி.மு.க.தான் லீட் பண்ணணும். அதோடு, விஜயகாந்த் கட்சிக்கு ஒதுக்கப்படுற அளவுக்கு ம.தி.மு.க.வுக்கு சீட் ஒதுக்கப்படணும். அதிலும் குறைக்கக்கூடாது. அதனால இந்த விஷயம் சம்பந்தமா நீங்க பேசவேண்டாம்னு சொல்லியிருக் காரு. அதனாலதான், தமிழருவி மணியன் மறுப்பு அறிக்கை கொடுக்கவேண்டிய நிலைமை.''

""தே.மு.தி.க மூவ் எப்படி இருக்குது?''

""பா.ஜ.க தரப்பிலும் பேசிக்கிட்டிருக்காங்க. காங்கிரஸோடும் பேசிக்கிட்டிருக்காங்க. கட்சியின் மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்களும் மாவட்ட செயலாளர் களும், ஜெ.வின் அடக்கு முறையை நாம் எதிர் கொள்ளணும்னா தி.மு.க.வோடு தான் கூட்டணி சேரணும். அது தி.மு.க.-தே.மு.தி.க.- காங் கிரஸ்னு பெரிய கூட்டணியா இருந்தா அதிக  தொகுதிகளை அந்தக் கூட்டணிதான் ஜெயிக் கும். நம்ம கட்சிக்காரங்களுக்கு நம்பிக்கை வரும். எம்.பி. தேர்தலில் ஜெயிச்சி நம்ம பலத்தை அதிகரிச்சிட்டு, சட்டமன்றத் தேர்தலில்  தனித்தோ, தி.மு.க.-அ.தி.மு.க. இல்லாத கூட்டணியாகவோ போட்டி போடலாம்னு விஜயகாந்த்துக்கு நெருக்க மானவங்ககிட்டே சொல்லிக்கிட்டிருக்காங்க. எதுவாக இருந்தாலும் தே.மு.தி.க.வில் விஜயகாந்த் எடுப்பதுதான் முடிவு. செப்டம்பர் 1-ந் தேதி செயற்குழுவை கூட்டியிருக்காரு விஜயகாந்த். அதில் கூட்டணி பற்றிய தெளிவு பிறக்கலாம்னு எதிர்பார்க்கப்படுதுங்க  தலைவரே.''… 

""ம்.. அடுத்த மேட்டருக்கு வர்றேன். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளரா இருந்தார் இறை யன்பு ஐ.ஏ.எஸ்.  தமிழக கேடரில் தேர்வான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தமிழக அரசின் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ் மெண்ட் மூலம் பயிற்சி கொடுத்து, போஸ்டிங் போடுவாங்க. இப்ப 20 பேர் பயிற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க. இறையன்பு நேரடியா இவங்களுக்குப் பயிற்சி கொடுத்தப்ப அவர் கிட்ட, அரசியல்வாதி களையும் ஆட்சியாளர் களையும் அனுசரித்து மக்களிடம் எப்படி நல்லபெயர் எடுப்பது? இதற்கான அணுகுமுறை, அளவுகோல் ஏதாவது இருக்குதா?ன்னு பயிற்சி பெற்றவங்க கேட்டி ருக்காங்க.''

""இருதரப்பையும் பேலன்ஸ் பண்ணுவதா, ரொம்ப டஃப் கொஸ் டின் ஆச்சே?''

""அதனால இறையன்பும் நேரடியா எதுவும் சொல்லலையாம். எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்களுக்குத் தேவையானதை  செய்யுங்கன்னு சொல்லியிருக்காரு. சமீபத்தில் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டாங்க. அதில் இறையன்பை பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைக்கு மாற்றிட்டாங்க. ஆனா, தமிழக அரசின் முக்கியமான 7  டிபார்ட்மெண்ட்களில் 2 வருடமா ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றமேயில்லாமல் நீடிச்சிக்கிட்டிருக்காங்க.''

""மந்திரிகள் நிலவரம் எப்படி இருக்குது?''

""ஓ.பி.எஸ். இன்னும் பதட்டத்திலேயேதான் இருக்காரு. ஓ.பி.யின் மகன் சம்பந்தமா நிறைய புகார்கள் சசிகலா மூலம் தொடர்ந்து மேலே போய்க்கிட்டிருக்குது. அதனாலதான் ஜனாதிபதி வந்தப்பகூட அவரை வரவேற்க ஓ.பி.எஸ்.ஸை ஜெ. அனுப்பலை. பிரதமர் வந்தப்ப செந்தில்பாலாஜியை அனுப்பி வச்சார் ஜெ. திருமங்கலம் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் வீட்டுத் திருமணத்துக்கும் ஓ.பி.எஸ்ஸை தலைமைதாங்க அனுமதிக்கலை. இதுதான் ஓ.பி.எஸ். நிலைமை. கூடுதலா, இன்னும் இரண்டு மந்திரிகளும் ஜெ.வோட கோபத்துக்கு ஆளாகியிருக்காங்க.''

""யாராரு?''

""ஒருத்தர் வைகைச்செல்வன். இவர்தான் இளைஞர்கள்-இளம்பெண்கள் பாசறைக்குப் பொறுப் பாளர். அவர் நடத்துற கூட்டங்களில் நிறைய பேர் கலந்துக்கணும்னு நினைக்கிறாராம். கூட்டம் குறைவா இருந்தா, கட்சியை விட்டு நீக்கிடுவேன்னு மேடையில் சொல்றாராம். கட்சியிலிருந்து நீக்கும் அதிகார மெல்லாம் பொதுச்செயலாளருக்குத்தான் உண்டு. இவர் என்ன பொதுச்செயலாள ரான்னு மேலிடம் கோபத்தில் இருக்குதாம். இன்னொருத்தர், கே.பி.முனுசாமி. உயர்நீதிமன்ற நிர்வாகக்கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கிட்ட உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தன்னோட பேச்சை எழுதி வச்சுத் தான் படித்தார். ஜெ.வும் அப்படித்தான் படித்தார். ஆனா கே.பி.முனுசாமி எந்தக் குறிப்பும் வச்சிக்காம பேசினாரு. இதென்ன  பொதுக்கூட்டமா, பெரிய பெரிய நீதிபதிகள் இருக்கிற இடத்தில் இப்படியா பேசுவதுன்னு ஜெ. டென்ஷனாயிட்டாராம். ''

""மந்திரிகள் மீதான டென்ஷ னெல்லாம் அவங்களோட பதவிக்கு வேட்டு வச்சிடுமா, மந்திரிசபை மாற்றம் எப்போதுன்னு எதிர்பார்ப்பு இருக்குதே?''



""அஷ்டமி, நவமிங்கிறதால புதன்கிழமையும் வியாழக்கிழமையும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலை. மந்திரி வைத்திலிங்கம் மகன் கல்யாணத்தை      ஜெ. நடத்திவைக்கிறது பற்றி போன முறையே பேசியிருந்தோம். அதற்கப் புறம்தான் மந்திரிசபை மாற்றம் இருக் கும்னும் கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க. 6 பேர் புதுசா சேர்க்கப் படுவாங்களாம். 6 பேருக்கு கல்தாவாம்.  ஏகப்பட்ட புகாருக்குள்ளாகியிருக்கிற வளர்மதி  மீது ஜெ. செம கோபத்தில் இருக்காராம்.''

""கூடுதலா நான் ஒரு தகவல் சொல்றேன்..  அ.தி.மு.க சார்பில் ஜெ. உட்பட 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க. அவங்களில் 6 பேர் தலித். மதுராந்தகம் எஸ்.கணிதா, ஊத்தங் கரை மனோரஞ்சிதம், கள்ளக்   குறிச்சி அழகுவேலு, துறையூர் இந்திராகாந்தி, சீர்காழி சக்தி, சங்கரன்கோவில் முத்துச்செல்வி இவங்க எப்படி செயல்படுறாங் கங்கிற டீடெய்லையும் வாங்கி யிருக்காராம் ஜெ.'' 

 லாஸ்ட் புல்லட்!

உடல்நலம் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய சோனியாகாந்தியின் ப்ளாக்பெர்ரி செல்போன், மருத்துவமனையில் திருடுபோய்விட்டது. பல முக்கிய விவரங்கள் அடங்கிய அந்த போனை சைபர் க்ரைம் அதிகாரிகளுடன் சோனியாவின் பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து தேடுகின்றனர். கடந்த வருடத்தில் டெல்லி விமான நிலையத்தில் ராகுல்காந்தியின் மொபைலும் திருடுபோய்விட்டது.

சம்பளக்குறைப்பை எதிர்த்து ஸ்டே வாங்கிய உதவிப்பொறியாளர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துவிட்டு மற்றவர்களுக்கு சம்பளத்தைக் குறைத்து வழங்கும்படி கருவூலத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டாலும் ஸ்டே வாங்கியவர்கள் யார்  யார் என்ற விவரம் தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தனர் அதிகாரிகள். இதனை நக்கீரனில் வெளியிட்டிருந்தோம். இச்செய்தி வெளியான நிலையில், யாருக்கும் சம்பளத்தைக் குறைக்க வேண்டாம் என கருவூலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது நிதித்துறை. உதவிப்பொறியாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மூப்பனாரின் 12-ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 30-ந் தேதி. அதற்கு முன்பாகவே வாசன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினர். நலத்திட்ட உதவிகள், தியாகதீபம் என்ற மூப்பனார் பற்றி

ad

ad