புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013

நவிப்பிள்ளைக்கும் அருண் தம்பிமுத்துவிற்கும் இடையில் காரசார விவாதம்

விடுதலைப்புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியாக இருந்தனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு
மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு காராசாரமாக இருந்தாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாம் தம்பிமுத்து மற்றும் அவரது மனைவி ஆகியோர் புலிகளினால் கொலை செய்யப்பட்டனர்.
அன்று தமது பெற்றோரை கொலை செய்த புலிகள் சிறுவனாக இருந்த தன்னையும் கடத்திச் சென்றதாக அருண் தம்பிமுத்து, மனித உரிமை ஆணையாளரிடம் கூறியுள்ளார். இன்று மனித உரிமைகள் குறித்து குரல் எழுப்பும் நபர்கள் தன்னை மீட்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வன்னியில் போரின் இறுதிவாரத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என தெரிவித்துள்ள நவநீதம்பிள்ளை, கொழும்பில் நடைபெற்ற குற்றங்களுக்கு யார் பொறுப்பு கூறுவது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ad

ad