புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
நடிகர் சிவாஜிகணேசனை பற்றி வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் அரசு சார்பில் மணிமண்படம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பேரவையின் தலைவர் கே. சந்திரசேகரன் தெரிவித்தார்.


இது குறித்து விருதுநகரில் நடிகர் சிவாஜி சமூக நல பேரவையின் மாநில தலைவர் கே.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம், ’’நடிகர் திலகம் சிவாஜிகணேசன் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதோடு, நடிகர்கள் அனைவரும் முன்னோடியாக பின்பற்றி வருகின்றனர். சிவாஜிக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வரிடம் மணிமண்டபம் அமைப்பதற்காக இடம் ஒதுக்கி்த் தரவேண்டும் என அப்போது இருந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று கடந்த 26.9.2002ல் சென்னை அடையாறு பகுதியில் 65 சென்ட் இடத்தை அரசு ஒதுக்கீடு செய்தது. அந்த இடத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது. ஆனால், குறிப்பிட்ட இடத்தில் இச்சங்கத்தின் சார்பில் 21.4.2005ல் பூமிபூஜை நடத்தப்பட்டு 4 மாதங்களில் பணியும் முடியும் என அப்போதைய தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
இந்நிலையில் ஒவ்வொரு நினைவு நாள் வரும் போதும் அறிவிப்பு வெளியாகும் என சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இதேபோல், கர்நாடாகவில் மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு 6 மாதங்களில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்து நடிகர்களை கொண்டாடி வருகிறது.

அதேபோல், தமிழகத்திலும் வருங்கால சந்ததியினர் அறி்ந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில்  மணி மண்டபம் அமைப்பதற்கு முதல்வர் ஜெ.ஜெயலலிதா நடவடிக்கை எடு்க்க வேண்டும்’’என்று தெரி வித்தார்.

ad

ad