புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலாவது பிரமாண்டமான தேர்தல் பிரசாரக் கூட்டம் எழுச்சிபூர்வமாக நடைபெற்று நடைபெற்றது.
கடுமையான இராணுவ அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் தொடங்கிய எழுச்சி கூட்டங்கள் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு கட்டமாக இன்று மாலை 4.30 மணி தொடக் கம் 9 மணிவரையில் முல்லைத்தீவு நகரில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது உரையில், இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது இரண்டு நாடுகள் தமக்கிடையில் செய்து கொண்டதொரு ஒப்பந்தமாகும்.
அதனை இலங்கை அரசாங்கம் தான் நினைத்தவுடன் இரத்துச் செய்யவோ, இல்லாமல் செய்யவோ முடியாது. எனவே 13ம் திருத்தச்சட்டத்தில் மாகணசபைகளுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கியே ஆகவேண்டும்.
அதற்கான நாங்கள் போராடுவோம். அத்தகைய நெருக்கடி மிக்க போராட்டத்திற்காக மக்கள் எம்மைப் பலப்படுத்த வேண்டும். இதுவொரு போராட்டம் இங்கே வாக்களிக்கும் அனைவரும், எம்மோடு பங்காளிகளாக இருக்கும் அனைவரும் போராளிகள்.
அந்த மனோ நிலையுடன் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பு விகிதம் அதிகரிக்க வேண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வடக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க வேண்டும்.
அதுவே மாகாணசபையில் தமிழர்கள் சாதிப்பதற்காக நங்கள் செய்யக் கூடியதொரு மிகச்சிறந்த காரியமாகும். எனவே மக்கள் ஒன்றிணைந்து வாக்களியுங்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.
இதேவேளை கூட்டம் ஆரம்பித்தது முதல் இறுதிவரையில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் வடக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்களில் அதிகளவான மக்கள் கலந்து கொள்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

ad

ad