புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2013

தெற்கில் அரங்கேறிய இராணுவ அடக்கு முறை! ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை துரத்தித் துரத்தி தாக்கிய இராணுவத்தினர் - ஒருவர் பலி
கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
கொழும்பு கண்டி வீதியின் பெலும்மாற என்ற இடத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
கொழும்பு கண்டி வீதிக்கு குறுக்காக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, இராணுவ ஜீப் வண்டியின் ஒன்றின் மேல் எறிய இராணுவ அதிகாரி ஒருவர், 5 நிமிடங்களுக்குள் வீதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார். அவ்வாறு கலைந்து செல்லவில்லை தாக்குதல் நடத்தப்படும் என கூறினார்.
ஊடகவியலாளர் புகைப்படமோ, வீடியோ படங்களையே எடுக்க கூடாது. மீறி எடுத்தால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அந்த அதிகாரி எச்சரித்தார்.
அப்போது கூடியிருந்த மக்கள் “ஐயோ சார் அப்படி செய்ய வேண்டாம். நாங்கள் குடிப்பதற்கு தண்ணீரை தான் கேட்கிறோம். எமன்கு பெரிய பிரச்சினை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மீது பொல்லுகளால் சரமரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சிலர் அடியை வாங்கி கொண்டு சிதறி ஓடினர்.
சிலர் ஓடி ஒழிந்து கொள்ள இடம் தேடினர். பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதனையடுத்து 5 நிமிடங்களில் வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடை நீங்கியது. சுமார் 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வீதியின் இருமருங்கிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
பாதுகாப்பு தேடி வீடுகளுக்குள் ஓடியவர்கள் தேடித் தேடி தாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை கொழும்பு - கண்டி வீதியின் பெலும்மாற சந்தியில் பிரதேச வாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடையேற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறிகையில், பிரதேசவாசிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையேற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை அவர்கள், ஏற்காதால இராணுவத்தின் உதவியை நாட நேர்ந்தது என்றார்.
இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக இராணுவம் தலையிட நேர்ந்தது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இந்த நிலையில், ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ரத்துபஸ்வல பிரதேச மக்களில் சிலர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பலி பிபிசி
இலங்கையின் கம்பஹா மாவட்டம் வலிவேறியப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளார்.
இருபதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்தப் பகுதியில் செயற்படும் ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து வெளியாகும் நச்சுப் பொருட்களின் காரணமாக நிலத்தடி நீர் பெருமளவில் மாசடைந்துள்ளதாக் கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அப்பகுதியில் உள்ள முக்கிய பௌத்த பிக்குகள் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், சுற்றுச்சூழல் ஆணையம் ஆகியோருடன் பொதுமக்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
ரப்பர் பொருட்களும், கையுறைகளும் தயாரிக்கும் ஹேலிஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரினர்.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.
இதையடுத்து அப்பகுதியில் மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு புத்த பிக்குவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் வலுப்பெற்ற நிலையில், வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்ட போதே, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு ஒரு பதட்டமான சூழல் நிலவுவதாக கூறும் உள்ளூர் செய்தியாளர்கள், போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு போக தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் பிபிசியிடம் தெரிவித்தனர்.
€€€€€€

ad

ad