புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013

அலை அலையாகத்திரண்ட மக்கள் வெள்ளம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் வேட்பாளர் அறிமுக நிகழ்வில்.....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்று வவுனியா குருமண்காடு கலைமகள் விளையாட்டரங்கில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது

இப்பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் நீதியரசரும் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, க.சுரேஷ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்,
ப.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், எம்.எ.சுமந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்டத்தில் இருந்து முஸ்லீம் மக்களின் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிடும்அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மி,மற்றும் வடமாகாண சபைக்காக வவுனியாமாவட்டத்தில் இருந்து போட்டியிடும் எம்.எம்.ரதன் ஆசிரியர் (பதில் தலைவர் – நகரசபை வவுனியா),வைத்தியகலாநிதிஎஸ்.சத்தியலிங்கம், செந்தில்நாதன் மயூரன்,துரைச்சாமி நடராஜசிங்கம் , எம்.பி.நடராஜா,ஆர்.இந்திரராஜா,எஸ். தியாகராஜா,  ஜி.ரி.லிங்கநாதன்,க.சந்திரகுலசிங்கம் ஆகிய ஒன்பது வேட்பாளர்களும் கட்ட்சி ஆதரவாளர்களும் தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் வெள்ளத்துடன் நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது
இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக பாராளுமன்ற உறுப்பினர்கள்,
வடமாகாணசபை வவுனியாமாவட்ட வேட்பாளர்கள் ஆகியோரை வவுனியாவாழ் தமிழ்மக்கள் ஓர் அணியாக அணிதிரண்டு வவுனியா குருமன்காடு சந்தியில் இருந்து நாதஸ்வர ஓசை ஒலிக்க மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தமை வவுனியா மண்ணின் வீரத்தையும் வவுனியாவாழ்மக்களின் ஒருமித்த ஆதரவினையும் வெளிப்படுத்தி நின்றமை
"இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது"
என்ற தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த ஒரு நிகழ்வாக இன்றைய நிகழ்வானது அமைந்தது என்றால் மிகையாகாது வரவேற்பு நிகழ்வினைத்தொடர்ந்து தமிழர்களின் உரிமைப்போரா ட்டத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கும் அதன்போது இறந்த பொதுமக்களுக்குமாக இரண்டு நிமிடங்கள் அக வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து
பராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் தலைமையில் நிகழ்வானது சிறப்புற நடைபெற்றது இன் நிகழ்வில் சிறப்புரைகளை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களில் இருந்து சிலவரிகள்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,முன்னாள் நீதியரசரும் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, க.சுரேஷ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், ப.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், எம்.எ.சுமந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்அனைவரும் ஒருமித்த கருத்தினை முன்வைத்தார்கள்
இந்த அரசு வடமாகாண சபைத் தேர்தலை மனதார விரும்பி நடத்தவில்லை. சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவே நடத்துகின்றது. அவ்வாறு அழுத்தத்தின் மத்தியில் நடத்தும் தேர்தலிலும் எப்பாடுபட்டாவது வெல்ல வேண்டும் என்று அரசு நினைக்கின்றது.
இந்த அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் தொடர்ந்து அழுத் தங்கள் உருவாகி வருகின்றன. இரண்டு தடவைகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போர்க்குற்றச் சாட்டுகள் தொடர்பில் இந்த அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச மட்டத்தில் வலுப்பெற்று வருகின்றது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது.
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசுக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் எமது உரிமைகளை வீணடிக்கும் செயல். முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான எங்கள் உறவுகளைக் கொன்றொழித்த, காணாமற்போகச் செய்த, அட்டூழியம் செய்த கொலைகார அரசையா ஆதரிக்கப் போகின்றீர்கள்? அல்லது அவர்களது அருவடிகளான ஒட்டுக் குழுக்களையா ஆதரிக்கப்போகின்றீர்கள்? மாகாணசபை முறையை நாங்கள் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் அதிலுள்ள ஒருசில அதிகாரங்களைப் பயன்படுத்தி இனவழிப்பை நிறுத்த வேண்டும்.
மாகாண சபையை நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெல்ல வேண்டும். அப்போதுதான் நாங்கள் சொல்வதை - தமிழ் மக்கள் சொல்வதை - சர்வதேசம் கேட்கும். மாகாண சபை அதிகாரங்களை இந்த அரசு தந்தால் அதை வைத்து மக்களுக்கு சேவை செய்வோம். தராவிட்டால், இந்தத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுத்த சர்வதேசத்துடன் இணைந்து அந்த அதிகாரங்களைப் பெற்றெடுப்போம். எங்கள் மக்கள் ஜனநாயக சூழலில் வாழ விரும்புகின்றனர். இதனால் இங்கு நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் விலகப்பட வேண்டும்
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் மாபெரும் வெற்றியை வடக்கு மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான எங்கள் உறவுகளைக் கொன்றொழித்த, காணாமற்போகச் செய்த, அட்டூழியம் செய்த கொலைகார அரசையா ஆதரிக்கப் போகின்றீர்கள்? அல்லது அவர்களது அருவடிகளான ஒட்டுக் குழுக்களையா ஆதரிக்கப்போகின்றீர்கள்? - என்றனர்
தொடர்ந்து உரைநிகழ்த்திய வேட்பாளர் எம்.எம்.ரதன் கருத்து தெரிவிக்கையில் வவுனியா மண் பெருமைமிக்க புனிதமான மண் இந்த மண் எண்களின் சொந்த மண் இந்த மண்ணிலேதான் தமிழர்களின் தாயகவிடுதலைக்காக போராடி வீரகாவியமான மாவீரர்கள் விதைக்கப்பட்ட ஈச்சங்குளம் மாவீரர்துயிலுமில்லத்தின் சாட்சியாக இந்த வட மாகாண சபையினை நாம் வவுனியா, மன்னார் ,முல்லைத்தீவு கிளிநொச்சி,யாழ்ப்பாணம் என்கின்ற ஐந்து முனைகளில் இருந்தும் எமது மக்கள் வாக்கு என்னும் ஆயுதத்தால் பல்குழல் பீரங்கிகளாக மாறி தாக்குதல்களை நடாத்தி வடமாகாண சபையினை எம் கரங்களிலே தருவார்கள் தமிழர்களின் தாகம் வடகிழக்கு இணைந்ததாயகம் என்று குறிப்பிட்டார்
இதனைத்தொடர்ந்து வன்னி மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் குழுவினரால் தயாரிக்கப்பட்ட தமிழ் த்தேசியக்கூட்டமைப்பின் தேசிய கீதம் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் தலைவர் . சம்பந்தன் அவர்கள் பெற்றுக்கொள்ள அதனை நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்
இந்நிகழ்வுகளைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் நன்றியுரையுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது

ad

ad