புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

வடக்கு மாகாண சபைத் தேர்தலின் வட்டக்கச்சியில் நடைபெற்ற முதலாவது பிரசாரக் கூட்டம் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இலக்கம் 1 இல் போட்டியிடும் திரு ப.அரியரத்தினம், இலக்கம் 5 இல் போட்டியிடும் திரு த. குருகுலராசா, இலக்கம் 7 இல் போட்டியிடும் திரு சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரை ஆதரித்து வட்டக்கச்சி, இராமநாதபுரம் கல்மடுநகர் ஆகிய பிரதேசங்களை இணைத்து, வட்டக்கச்சி பொதுச் சந்தை வளாகத்தில் நேற்று மாலை 4.00 மணிக்கு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் பிரசாரக் கூட்டம் ஆரம்பமானது.
தமிழ் மக்களின் உரிமைக்காக வீழ்ந்து விதையாகிப் போன செல்வங்களுக்கும் தமிழ் உணர்வோடு உயிர் நீத்த உறவுகளுக்குமான அகவணக்கத்தைத் தொடர்ந்து, வரவேற்புரையினை கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினர் வே.செல்லத்துரை அவர்கள் நிகழ்த்த தலைமையுரையினை கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து உரைகளை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச தவிசாளர் நாவை குகராசா, உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் அ.தனிநாயகம், உப தவிசாளர் செந்தூரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், மாற்று வலுவுடையோர் சங்கத் தலைவர் தி.சிவமாறன் ஆகியோர் வழங்கினர்.

ad

ad