புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2013



           ""ஹலோ தலைவரே... டெல்லியிலே எதிர்க்கட்சியான பா.ஜ.க தன்னோட தேர்தல் வியூகங்களை நரேந்திர  மோடி தலைமையிலான பிரச்சாரக்குழுவைக் கூட்டி ஆலோ சிக்க ஆரம்பிச்சிடிச்சி.''

nakkeeran
""தமிழ்நாட்டிலேயும் எதிர்க்கட்சியான தி.மு.க தன்னோட மாவட்டச் செயலாளர்களைக் கூட்டி எம்.பி. தேர்தல் தொடர்பா ஆலோசனை நடத்தியிருக்குதே...''

""அவசரமா தேர்தல் நடக்கிற மாதிரியான அறிகுறி எதுவும் தெரியலீங்க தலைவரே.. 2014 மே மாதம்தான் எம்.பி. தேர்தல்னு டெல்லி வட்டாரங்கள் சொல்லுது. முன்கூட்டியே நடந்தால்கூட, 2014 மார்ச்சில் நடக்கலாம்னும் சொல்றாங்க. ஆனா, தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான அ.தி.மு.க முன்கூட்டியே தேர்தல் வேலைகளை ரகசியமா தொடங்கிடிச்சி. அதனாலதான் தி.மு.க தலைவர் கலைஞரும்  ஜூலை 29-ந் தேதியன்னைக்கு அறிவிப்பு வெளியிட்டாரு. ஆகஸ்ட் 16-ந் தேதி மா.செ.க்கள் கூட்டம் நடக்கும்னும் நாடாளுமன்றத் தேர்தல் பற்றி அதில் விவாதிக்கப்படும்னும் அறிவிப்பில் சொல்லப்பட்டிருந்தது. அதன்படி, 16-ந் தேதி அறிவாலயத்தில் கூட்டம் நடந்தது.''

""தி.மு.க எம்.பி.க்கள் சிலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கிட்டாங்களே!''


""கூட்டத்துக்கு முதல்நாள் நைட்டுதான், எம்.பிக்களையும் கூப்பிடுவோம்னு முடிவு செய்யப்பட்டிருக்குது. பல எம்.பிக்கள் சொந்த தொகுதிக்குப் போயிட்டாங்க. சென் னையில் இருந்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி இவங்கதான் கலந்துக்கிட்டாங்க. கூட்டம் நடந்த அறிவாலயமே மத்திய சென்னையில்தான் இருக்குது. ஆனா, மத்திய சென்னை தொகுதி எம்.பி தயாநிதி மாறன் கலந்துக்கலை. மறுநாள் அவங்கப்பா முரசொலி மாறனோட 80-வது பிறந்தநாளுங்கிறதால அதற்கான ஏற்பாடுகளில் அவர் பிஸியா இருந்தாரு. கலைஞர் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யணும்னு சொல்லி, மா.செ. கூட்டத்துக்கு வரலை.''

""தேர்தல் கூட்டணி, வியூகம் இது பற்றியெல்லாம் கூட்டத்தில் பேசுறதுக்கு மா.செ.க்கள் ரெடியாகுறாங்கன்னு ஏற்கனவே நாமே பேசியிருந்தோமே.. ரெடியா இருந்த மா.செ.க்களுக்கு பேச சான்ஸ் கிடைத்ததா?''


""கிட்டதட்ட எல்லா மா.செ.க்களையும் கலைஞர் பேசச் சொல்லிட்டாரு. 16-வது நாடாளுமன்றத் தேர்தல் பற்றி பேசுறதுக்கு மா.செக்களும் ரெடியா இருந்தாங்க. இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்து ஆட்சியமைச்சவர் ஜவகர்லால் நேரு. எலெக்ஷன் தொடர்பான தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் முதலில் பேச ஆரம்பித்தவர் கே.என்.நேரு. தன்னோட திருச்சி மாவட்டத்து நிலைமையை விளக்கி, மற்ற மாவட்டம் மாதிரி எங்க மாவட்டம் இல்லை.. அங்கே காங்கிரஸுக்குன்னு ஒரு செல்வாக்கு இருக்குது. அதனால கூட்டணியில காங்கிரஸ் இருக்கணும். விஜயகாந்த்தும் நம்ம கூட்டணியிலே இருந்தால் அதிக இடங்களை ஜெயிக்கலாம்னு சொல்லி யிருக்காரு. திண்டுக்கல் ஐ.பெரியசாமியும் கூட்டணியில காங்கிரஸ் வேணும்னு சொல்லிட்டு, தலைவர் என்ன முடிவெடுத்தாலும் சரிதான்னு சொல்லிட்டாராம்.''

""மற்ற தென்மாவட்ட மா.செ.க்கள்?''


""கன்னியாகுமரி சுரேஷ்ராஜன், விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமநாதபுரம் சுப.தங்கவேலன், தேனி மூக்கையா எல்லோரும் எம்.பி. எலெக்ஷன்னா காங்கிரசுக்கு தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவு ஓட்டு கிடைக்கும். அதனால காங்கிரசோடு கூட்டணி வச்சிக்கலாம்னு சொல்லியிருக்காங்க. திருநெல்வேலி கருப்பசாமிபாண்டியன் பேசுறப்ப, கூடன்குளம் பிரச்சினையிலும் மீனவர்கள் பிரச்சினையிலும் காங்கிரஸ் மேல அந்த மக்களுக்கு அதிருப்தி இருக்குது. அவங்களில் பெரும்பாலும் சிறுபான்மை சமூகத்தவர்தான். பா.ஜ.கவில் மோடிதான் பிரதமர் வேட்பாளர்னு அறிவிச்சால், சிறுபான்மை ஆதரவு திரும்பவும் காங்கிரசுக்குக் கிடைக்கும்னு சொல்லி யிருக்காரு. 

""வடமாவட்ட மா.செ.க்கள் என்ன சொன்னாங்களாம்?


""எங்க தொகுதியில காங்கிர செல்லாம் கிடையாதுன்னு ஓப்பனா சொன்ன கடலூர் மா.செ எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், நம்ம தயவிலே தான் காங்கிரஸ்காரங்க எம்.பி. யாகிக்கிட்டிருக்காங்கன்னு சொன்னாரு. போன  கூட்டத்துல காங்கிரஸ் கூட்டணி வேணாம், வேணாம்னு சொன்ன மா.செ.க் களெல்லாம் இப்ப கூட்டணி  வேணும்ங்கிறாங்கன்னு சொன்ன எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இப்ப நம்மகூட இருக்கிற விடுதலை சிறுத்தைகளை கன்டினியூ பண்ணலாம். நம்ம பலத்தை நம்பி செயல் படணும். நம்ம கட்சிக்காரங்க மேடையில பேசுறப்ப ஜெ.வை அந்தம்மா, இந் தம்மான்னு சொல்றாங்க. ஆனா, அ.தி.மு.க மேடையில நம்ம தலைவரோட  பெய ரைச்சொல்லி மோசமா பேசுறாங்க. அதுக்குப் பதிலடி கொடுக்கிற விதத்திலே நாம தெம்பா, தைரியமா வேலை செய்தா போதும். எம்.பி. தேர் தலில் ஜெயிச்சிடலாம்னு சொல்லி யிருக்காரு.''

""தி.மு.க தொண்டர்கள் மனநிலையும் அப்படித்தாம்ப்பா இருக்குது. தி.மு.க. எதிர்க் கட்சின்னா ஒரு காலத்துலே மேடையிலே அனல் பறக்கும். எலெக்சனில் தோற்ற மறுநாளே கிளைச் செயலாளர் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் போட்டு களைகட்ட வச்சிடுவாங்க. இப்ப பொதுக்கூட் டம் போடுறதெல்லாம் குறைஞ்சு போயிடிச்சி. கிளைச்செயலாளர் சொந்தமா கூட்டம் போட முடியல. மா.செ. ஒப்புதல் கொடுத்தாதான் செயல்படமுடியுது. மா.செ. சொல்ற ஆளைத்தான் பேச அழைக்கணும். அப்படி வந்து பேசுறவர் கலைஞ ரையும் ஸ்டாலினையும் மா.செ. வையும் புகழ்ந்து தள்ளிட்டு, மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசாம போயிடுறாரு. நடத்துற கூட்டத்துனாலேயும் பிரயோஜன மில்லைன்னு தி.மு.க தொண்டர்கள் சொல்றாங்கப்பா..

""உண்மைதாங்க தலைவரே.. மா.செ.க்கள் கூட்டத்திலே மற்ற மா.செ.க்கள் என்ன பேசுனாங்கன்னு சொல்லிடுறேன். விழுப்புரம் மா.செ. பொன்முடி, எங்க மாவட்டத்துல காங்கிரசுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. கூட்டணிக்கு அவங்க வேணுமா இல்லையான்னு தேர்தல் நேரத்தில் பார்த்துக்கலாம். தே.மு.தி.க.வுக்கு ஒரு ஓட்டு வங்கி இருக் குதுன்னு பேசியிருக்காரு. ராஜ்யசபா தேர்தல் சமயத்தி லேயே தே.மு.தி.க.வின் ஆதரவைப் பெறும் முயற்சி யில் ஈடுபட்டவர் திருவண்ணாமலை மா.செ எ.வ.வேலு. அவர் பேசுறப்ப, காங்கிரஸ் கூட்டணி வேணாம். இங்கே ஆரணி போன்ற தொகுதிகளை அவங் களே எடுத்துக்குவாங்க. இந்த முறை நாம நிற்கணும். புதுமுகமா நிறுத்தணும்னு வலியுறுத்தியிருக்காரு.''

""ம்''…

""அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் சிதம்பரம் எம்.பி. தொகுதியிலும் பெரம்பலூர் எம்.பி. தொகுதியிலும் வருது. அந்த மா.செ. சிவசங்கரன் பேசும்போது, தலித் மக்கள் அதிகமிருக்கிற தொகுதி. அதனால நம்மகூட எப்போதும்போல விடுதலை சிறுத்தைகள் இருக்கணும். பா.ம.க தனித்துப் போட்டிங்கிற கணக்கில் தேர்தல் வேலை செஞ்சிக்கிட்டிருக்குது. அ.தி.மு.க அணியில் பா.ம.க இருந்த, போன எம்.பி தேர்தலிலேயே நாம இங்கே ஜெயித்தோம்னு சொல்லியிருக்காரு. மேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை, கிருஷ்ணகிரி மா.செ. செங்குட்டுவன், ஈழப்பிரச்சினையெல்லாம் எங்க மாவட்டத்துல கிடையாது, அதனால காங்கிரசோடு கூட்டணி வைக்கலாம்னு சொல்லியிருக்காரு. சட்டமன்றத்தில் கொங்கு மக்கள் கட்சியோடு கூட்டணி வச்சதை மனதில் வச்சி பேசிய திருப்பூர் மா.செ. சாமிநாதன், தயவுசெய்து ஜாதிக் கட்சிகளோடு கூட்டணியே வேணாம்னு வேண்டுகோள் வச்சிருக்காரு. ஈரோடு என்.கே.கே.பி. ராஜாவோ, விஜயகாந்த் இப்பவே அடுத்த முதல்வர்  மாதிரி செயல்படுறாரு. அவரோட கூட்டணி வைக்கிறதுக்கு நாம தனிச்சே போட்டி போடலாம்னு சொல்லிட்டாராம்.'' 

""கோவை பெல்ட் தி.மு.க.வுக்கு ரொம்ப வீக்காச்சே?''


""கோவை மா.செ.பொங்கலூர் பழனிச்சாமி பேசுறப்ப, காங்கிரஸ் நமக்குத் தேவை. விஜயகாந்த்தையும் கூட்டணிக்குக் கொண்டுவரலாம். தலைவர் எடுக்கிற முடிவுதான்னு சொல்லியிருக்காரு. தென்சென்னை மா.செ. ஜெ. அன்பழகன் பேசுறப்ப, கூட்டணிக்கு அவங்களா வந்தா பேசலாம். இந்த மீடியாக்களெல் லாம், அ.தி.மு.க எந்தக் கட்சியோடு கூட்டணி பேசினாலும், அ.தி.மு.கவோடு கூட்டணின்னு ஃபோகஸ் பண்ணுது. தி.மு.க தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தா, ஏதோ தி.மு.க.தான் மற்ற கட்சிகள்கிட்டே போய் பேசுதுங்கிற மாதிரி செய்தி வெளியிடுறாங்க. நாம இப்ப பலமாத்தான் இருக்கோம். கூட்டணிக்கு விருப்பப்படுறவங்க அவங்களா வந்து பேசட்டும்னு சொல்லியிருக்காரு. மா.செக்கள் பலரும் காங்கிரசோடு கூட்டணி, தே.மு.தி.கவோடு கூட்டணி, சிறுத்தைகளோடு கூட்டணின்னு ஆரம்பிச்சி, ஒவ்வொரு கட்சியின் பெயரா சொல்லிக்கிட்டிருக்க.. கலைஞர் குறுக்கிட்டு, அ.தி.மு.கவை விட்டுட்டீங்களே.. அதையும் சொல்ல வேண்டியதுதானேன்னு கிண்டலா சொல்லியிருக்காரு.''

""மார்ச் மாதம் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க வெளியே வந்தப்ப தி.மு.க.வினர் பலரும் பட்டாசு வெடிச்சி, இனிப்பு கொடுத்து கொண்டாடினாங்க. மு.க.ஸ்டாலின் இதில் ரொம்ப சந்தோஷமா இருந்ததோடு, பொதுக்கூட்டங்களிலும் காங்கிரசுக்கு எதிரா பேசி னார். இப்ப மா.செ.க்கள் கூட்டத்தில் மறுபடியும் காங்கிரஸ் கூட்டணி பற்றி பேச்சு வந்ததும், ஸ்டாலினோட ரியாக்ஷன் என்ன?''

""மா.செ.க்கள் பேசுற தையெல்லாம் அவர் குறிப்பெடுத்தபடியே இருந்திருக்கிறார். அப்புறம், மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்களை நடத்தணும்னு ஸ்டாலின் சொல்ல, உள்ளூர் பிரச்சினைகளை அந்தந்த மா.செக்களே கையிலெடுத்துப் போராடலாம்னு துரைமுருகன் சொல்லியிருக்கிறார். கட்சியின் பொருளாளர்ங்கிற முறையில் தேர்தல் நிதி பற்றி பேசிய ஸ்டாலின், சில மாவட்டங்களில் குறைந்தளவுதான் நிதி வசூலாகி யிருக்குதுன்னும், சில பேர் வசூல் புத்தகத்தின் அடிக்கட்டையை இன்னும் அனுப்பிவைக்கவில் லைன்னும் குறிப்பிட்டிருக்காரு.'' 

""கூட்டணி தொடர்பா மா.செக்கள் கூட்டத்தில் இறுதி  முடிவு எதுவும் எடுக்கலையா? கலைஞருக்கும் பேராசிரியருக்கும் இதுதொடர்பா அதிகாரம் கொடுப்பதா தீர்மானம் போடப் பட்டிருக்குதே?''


""காங்கிரசையும்  தே.மு.தி.க.வையும்தான் மா.செக்கள் பலரும் குறிப்பிட்டு சொல்லியிருக் காங்க. இதில் காங்கிரஸ் தரப்புக்கு தமிழகத்தில் தி.மு.க.வை விட்டால் சாய்ஸ் இல்லை. அதனால் அவங்க ரெடியாகத்தான்  இருக்காங்க. உணவு பாதுகாப்பு மசோதா சம்பந்தமா ஜெ.வுக்கு பதிலளித்த கலைஞர், தி.மு.க கொடுத்திருக்கும் திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால்தான் மசோதாவை ஆதரிப்போம், இல்லைன்னா ஆதரிக்கமாட்டோம்னு முரசொலியில் கட்டம் கட்டி அறிவிச்சிருந்தார். டெல்லியிலிருந்து வரும் தகவல்களோ, தி.மு.க உள்பட எந்தக் கட்சி கொடுத்த திருத்தத்தையும் காங்கிரஸ் அரசு ஏற்கத் தயாராக இல்லைங்குது. இதே நிலையில் ஆதரிக்கும்படி உங்க தலைமைகிட்ட சொல்லுங்கன்னு காங்கிரசோடு இணக்கமா இருக்கிற தி.மு.க எம்.பி.க்கள்கிட்டே சோனியா சொல்லி அகமது பட்டேல் வலியுறுத்துறாராம். கூட்டணி எப்படி இருக்கும்ங்கிறதை தெரிஞ்சுக்க இந்த மசோதா மீது தி.மு.க எடுக்கும் முடிவு வெளிப்படுத்தும்னு சொல்றாங்க.''

""தே.மு.தி.க நிலை?''


""தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் என்ன பேசுறாங்கன்னு தெரிந்துகொள்வதில் விஜயகாந்த் ரொம்ப ஆர்வமா இருந்திருக்காரு. விவரங்கள் தெரியவந்ததும் ரொம்ப சந்தோஷமாயிட்டாராம். அவங்களுக்கு நம்ம தேவை இருக்குது. அதனாலதான் ராஜ்யசபா தேர்தலில் அவசரப்படவேணாம்னு சொன்னேன். வெயிட் பண்ணுவோம். அப்பதான் நமக்கு அதிக சீட் ஒதுக்குவாங்கன்னு சொல்லியிருக்காராம் விஜயகாந்த்.''

""விஜயகாந்த்திலிருந்து விஜய் பக்கம் வர்றேன்.. ஜெ.வுக்கு நன்றி சொல்லி  அறிக்கை கொடுத்து, தலைவா படத்தை ரிலீஸ் பண்ணிட்டாரே விஜய்?''

""ஆமாங்க தலைவரே.. .. தயாரிப்பாளர் சங்கம் மூலமா இந்தப் பிரச்சினையை கவர்மெண்ட்கிட்டே  கொண்டு  போகலாம்னும் சங்கத் தலைவரும் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர், செயலாளர் தேனப்பன், பொருளாளர் தாணு மூவரும் மனு கொடுப்பதுன் னும் முடிவானது. இதில், தாணு மனு கொடுக்கப் போகலை. மற்ற இரண்டுபேரும்  கோட்டைக்குப் போனதும், நீங்க மட்டும் போங்கன்னு தேனப்பனை அனுப்பியிருக்கிறார் எஸ்.ஏ.சி. அதன்படி தேனப்பன் போய் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டியையும், ஜெ.வின் செயலாளர் ராம்மோகன்ராவையும் சந்திச்சி மனு கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், 300 இடங்களில் "தலைவா' படத்தை ரிலீஸ் பண்ண ரெடின்னு ட்விட்டரில் தெரிவிக்க, தலைவா நெருக்கடி கண்டு பதறுகிறேன்னு கலைஞர் பேட்டி கொடுக்க, கோட்டை வட்டாரம் பதறிடிச்சாம்.'' 



""தி.மு.க ஆட்சியிலே தன் படத்தை திரையிட முடியலன்னு விஜய் குரல் கொடுத்தாரு.விழாவுக்கு வரச் சொல்லி நெருக்கடி தர்றாங்கன்னு கலைஞர் முன்னாடியே அஜீத் பேசுனாரு. அதற்கு ரஜினி கை தட்டுனாரு. இந்த முறை தலைவாவுக்கு இவ்வளவு தலைவலி கொடுத்தும்கூட யாரும் இருமக் காணோம், அஜீத் தும்மக் காணோம். விஜய் சப்தநாடியும் ஒடுங்கி கிடந்தாரு. சினிமா ஹீரோக்களின் நிஜ தைரியம் அம் புட்டுத்தானா?''


""தனுஷ் முதலில் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுவிட்டு, அப்புறம் ஜகா வாங்கிட்டாரு. இளம் ஹீரோவான சித்தார்த் மட்டும்தான், சினிமாவுக்கு நீதி வேணும்னும் விஜய்க்கு ஆதராவ இருப்போம்னும் கருத்து சொல்லியிருந்தார். விஸ்வரூபம் பிரச்சினை வந்தப்பவும் கமலுக்கு ஆதரவா குரல் கொடுத்தவர் இந்த சித்தார்த்தான். ஆனா, தலைவா  படம் எப்படியாவது வந்தால் போதும்ங்கிறதுதான் விஜய் தரப்பின் நிலைமை. கோட்டையில் மனு கொடுத்தபிறகு, சனிக்கிழமை யன்னைக்கு தியேட்டர் அதிபர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனுக்கு மேலிடத்திலிருந்து சிக்னல் வந்திருக்குது. படத்தின் டைட்டிலில் உள்ள லீட் டூ வின்ங்கிற வார்த்தையையும், அரசியலுக்கு வரும் தகுதி வந்தாச்சிங்கிற வசனத்தையும் நீக்க விஜய் தரப்பும் சம்மதிக்க, படம் வெளியாக ரெடின்னு வேந்தர் மூவீஸ் ட்விட்டரில் தெரிவித்தது. பிரசாத் ஸ்டுடியோவில் படம் திரையிட்டுக்காட்டப்பட, மேலிடத்திலிருந்து வந்தவங்க பார்த்துட்டு ஓ.கே. சொல்லிட்டாங்க. இதையடுத்துதான், ஆகஸ்ட் 9-ந் தேதி ரிலீசாகவேண்டிய தலைவா, 20-ந் தேதியன்னைக்கு ரிலீசானது.''

""அதுக்கு முன்னாடியே திருட்டு டி.வி.டி விற்பனை ஜரூரா நடந்து பலரும் படத்தைப் பார்த்துட்டாங்க. அதெல்லாம் சரி.. தமிழக ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை என்ற அமைப்பின் வெடிகுண்டு மிரட்டலால்தான் தியேட்டர்களின் பாதுகாப்பு கருதி படத்தை வெளியிடலைன்னு ஆரம்பத்தில் அறிவிச்சாங்களே.. அந்த புரட்சிப் படை இப்ப அகிம்சை வழிக்கு திரும்பிடிச்சா? பெரிய ஹீரோக்கள் மாதிரியே அந்த வெடிகுண்டும் வெத்து வேட்டுதானா?''

ad

ad