புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2013

கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்: முஸ்லிம் அமைச்சர்கள்- இதுவொரு சர்வதேச சூழ்ச்சி- நிமால் சிறிபால
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏ.எச்.எம்.பௌசி, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன், ஏ.எல்.ஏ.எம் அதாவுல்லா, பஷீர் சேகுதாவூத் ஆகிய அமைச்சர்களும், பிரதியமைச்சர்களான எம்.எல்.எம் ஹிஸ்புல்லா, பைசர் முஸ்தபா, ஏ.ஆர்.எம். அப்துல் காதர் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சட்டத்தை செயற்படுத்துமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரம் சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான வன்செயல்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் முஸ்லிம் அமைச்சர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் சம்பவம் சர்வதேச சூழ்ச்சி- அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நடந்த கலவரம் அரசாங்கத்தை அசெகரியத்திற்கும், அவமதிப்புக்கும் உள்ளாக்க தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகளின் பிரதிபலன் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தல்கள் நடைபெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு, புலம்பெயர் விடுதலைப் புலிகள் உள்நாட்டு சக்திகளுடன் இணைந்து இவ்வாறான சம்பவங்களை ஏற்படுத்துகின்றனர்.
இப்படியான கலவரங்கள் ஏற்படும் என்றால், உயிர்களை தியாகம் செய்து பெற்று கொண்ட சமாதானமும் சுதந்திரமும் எமக்கு பிரயோசனமற்றதாகி விடும்.
தேர்தலில் மட்டுமல்ல நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் சகல இனங்களும் ஒன்றிணைந்து முன்வந்து செயலாற்ற வேண்டும்.
நாடு என்ற வகையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என சகல இனங்களும் ஐக்கியமாக இவ்வாறான பிரச்சினைக்கு முகாம் கொடுத்து தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சி திட்டங்களை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

ad

ad