புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2013

புதிய சாதனை படைத்தார் ஷிகார் தவான்

இந்தியா- தென் ஆப்ரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிட்டோரியாவில் இன்று நடைபெற்று வருகிறது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இதனையடுத்து தொடக்க வீரர்கள் ஷிகார் தவான், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் 14 ஓவர்களில் 100 ஓட்டங்களை தொட்டனர்.
37 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்த முரளி விஜய், ஹென்ட்ரிக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் புஜாராவும், ஷிகார் தவானும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 86 பந்துகளில் சதம் கடந்த தவான், அதே வேகத்தில் இரட்டைச் சதத்தையும் கடந்தார். 132 பந்துகளில் 24 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் இந்த சாதனையை அவர் எட்டினார்.
இதன்மூலம் சர்வதேச அளவில் ஏ அணியில் அதிகபட்ச ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை ஷிகார் தவான் பெற்றார்.
இதற்கு முன்பு 2008ம் ஆண்டு லண்டனில் நடந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் உபுல் தரங்கா 173 ஓட்டங்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அதனை இப்போது தவான் முறியடித்துள்ளார்.

ad

ad