புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2013

கருணா மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்: நவீபிள்ளையிடம் கோரிக்கை

லங்கையில் கடந்த மூன்று தசாப்தமாக இடம்பெற்ற போரில், சகல இனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாக மனித உரிமை
ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
போரின் இறுதிக்கட்டத்தில் மட்டுமின்றி, யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என திருகோணமலை சிவில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் போது நவீபிள்ளையின் பிரதிநிதி ரோரி முங்கவன் நேற்று இந்த உறுதிமொழியை வழங்கினார்.
முக்கியமாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த காலத்தில் பௌத்த பிக்குகள் கொலை செய்யப்பட்மை, சிறார்கள் கடத்திச் செல்லப்பட்டமை ஆகியன தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும் என திருகோணமலை நகரில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பிரதியமைச்சர் கருணா, விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த சமயத்தில், புலிகளினால் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் பிள்ளைகளின் பெற்றோர், காணாமல் போன தமது பிள்ளைகளின் புகைப்படங்களுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
முக்கியமாக அரந்தலாவ பிக்குகள் கொலை, திம்புலாகல விகாரையின் தலைமை பிக்கு கொலை உட்பட பல குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ககுமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ad

ad