புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2013


”கன்னித்தீவு பொண்ணா” பாடலுக்கு கார்த்திகேயனுடன் குத்தாட்டம் போட்ட ராதிகா சிற்பைஈசன்! [Video in] சமீபத்தில் வெளியாகி, வெற்றி பெற்ற ‘யுத்தம் செய்’ படத்தில் இடம் பெற்ற, கன்னித்தீவு பொண்ணா. கட்டெறும்பு
கண்ணா…” என்ற பாடலைப் பாடியவர் எம்.எல்.ஆர்.கார்த்திகேயன். இப்பாடல் மூலம் பிரபலமடைந்து, இன்று நிறைய படங்களுக்குப் பாடி வருகிறார். கோவிலில் பாடத் தொடங்கி, 13 வயதில் பள்ளியில் பாடி, 19 வயதில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திடம் கோரஸ் பாடியுள்ளார் எம்.எல்.ஆர். கார்த்திகேயன். டி.இமான் இசையில், ஜீவா நடித்த, ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தில் “வாடா வாடா பையா… என் வாசல் வந்து போடா…” பாடல்தான் இவர் பாடிய முதல் பாடல். முதலில் பாடிய பாடலே ஹிட்டானதால் தொடர்ந்து அசல், நந்தி, இரண்டு முகம், வாடா, தம்பிக்கோட்டை உள்ளிட்ட சுமார் 50 படங்களில் பாடியுள்ளார். இயக்குநர் மிஷ்கினை சந்தித்த கார்த்திகேயனுக்கு ‘யுத்தம் செய்’ படத்தில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்தப் பாடலை பாடி முடித்ததும், “இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலை பாடியிருக்கீங்க… அதனால் பெரிய ரவுண்ட் வருவீங்க…” என வாழ்த்தியுள்ளார் மிஷ்கின். அவர் வாழ்த்தியது போலவே இப்போது கார்த்திகேயன் பல இசையமைப்பாளர்களின் இசையில் பல படங்களுக்குப் பாடி வருகிறார். rathika_dance_kathiravan_001 சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா என தமிழ் இசை ரசிகர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கு சென்றும் பாடி வருகிறார். கடந்த வாரம் கனடா டொராண்டோவில் (Aug 4, 2013; Toronto) பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்ட ஐயப்பன் இந்து ஆலயத்தில் நடைபெற்ற “ஜோதி 2013″ நிகழ்வில் எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் பாடி ரசிகர்களை குசிப்படித்தினார் . இதில் இவர் பாடிய ஐட்டம் டான்ஸ் பாடலான “கன்னி தீவு பொண்ணா ” பாடலை மக்கள் மத்தியில் நின்று ஆட்டம் பாட்டமாக பாடி உற்சாகப்படுத்தினார். “மஞ்ச சேலையோடு, ஒரு மாசி கருவாடு ஆட்டம் போட்டு ஆடு, இது வானவில்லு ரோடு” என்று பாடும் போது கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனும் மஞ்சள் சேலையில் வந்து எம்.எல்.ஆர்.கார்த்திகேயனுடன் குத்தாட்டம் போட்டது ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது மட்டுமில்லாமல் இது�எம்.எல்.ஆர். கார்த்திகேயனுக்கும், இப்பாடலின் இசையமைப்பாளர்க்கும் கிடைத்த கவுரவமாகவே பார்க்கப்படுகிறது. வாழ்த்துக்கள் எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் & டீம்.

ad

ad