புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2013


’கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது’
மக்கள் முன்பு இசையமைத்த இசைஞானி!

ராஜராஜனின் போர்வாள் படத்தொடக்க விழா கரூர் பசுபதீசுவரர் கோயிலில் நேற்று(11.09.13) சித்தர் கரூவூரார் சன்னதியில் நடைபெற்றது.


கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியரும், ஹீரோவுமான சினேகன், இயக்குனர் அமுதேஸ்வர் கலந்துகொண்டனர். பின்னர் கோயில் வீதியில் உள்ள மேடையில் மெட்டமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன் பேசும்போது ”மக்களுக்கும் கலைஞர்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், மக்கள் முன் மெட்டு அமைக்கும் நிகழ்ச்சி இங்கு நடக்கிறது. ராஜராஜனின் குருவாக விளங்கிய கரூவூரார் சன்னதி இங்கு இருப்பதால் கரூரை தேர்வு செய்தோம்” என்றார். nakeeran


பின்னர் படத்தின் இயக்குனர் அமுதேஸ்வர் காட்சியை விளக்க, பாடல் வரிகளை சினேகன் கூற, இளையராஜா மெட்டமைத்தார்.

கடைசியாக இளையராஜா பேசும்போது ”கூட்டணி அமைத்து, இவரும் இவரும் சேர்ந்தால் பாடல் ஹிட்டாகும் என்கிறார்கள். என்னைப் பொருத்த அளவில் கூட்டணியும் கிடையாது, ஒரு புண்ணாக்கும் கிடையாது. நான் எப்போதுமே தனி ஆள் தான். வரிகளை சொல்லச் சொல்ல சுடச்சுட பாடல் கேட்டதற்கு நன்றி” என்றார்.

பின்னர் பசுபதீசுவரர் பற்றி ஒரு பாடல் பாடினார். ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ’இதயம் ஒரு கோயில்’  பாடலை பாடினார்.


கடலோரக்கவிதைகள் திரைப்படத்திற்குப் பிறகு பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா கூட்டணி உருவாகாதா என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 



'

ad

ad