புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013

அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் விடுக்கும் வேண்டுகோள் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை அரசவை எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் திகதியுடன் தனது பணியினை நிறைவு செய்கின்ற நிலையில் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல்
பணிகள் புலம்பெயர் தேசங்களெங்கும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவுஸ்றேலியா வாழ் தமிழ் மக்களுக்கான அறிவித்தல் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் விடுத்துள்ளது.

இந்த அறிவித்தலின் முழுவிபரம் :

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், அக்டோபர் 01, 2013 அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினது அரசவைதனது பணியினை நிறைவு செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அரசவை அக்டோபர் 1 ஆம் திகதி கலைக்கப்படுவதைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்குரிய தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, சனிக்கிழமை, உலகளாவிய ரீதியில் தமிழர் செறிவாக வாழும் நாடுகளில் நடைபெறவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; இரண்டாவது அரசவைக்கான அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றை நாம் எதிர்நோக்கியுள்ளோம். தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்து நாடுகளிலும் ஆரம்பமாகிவிட்டன. அந்த வகையில், அவுஸ்திரேலியாவிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் தேர்தலை சுதந்திரமாகவும், நீதியாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடாத்தி முடிப்பதற்கு உங்கள் ஒத்துழைப்பு இன்றியமையாதது. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தொண்டர்களாகப் பணியாற்ற விரும்புகின்றவர்கள் 0437 332 240 இந்த தொலைபேசி மூலம் அறியத்தாருங்கள்.

அவுஸ்திரேலிய நாடு முழவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும், இத் தேர்தலில் பங்கு கொண்டு, தமது வாக்குரிமையைப் பயன்படுத்தித், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் செயற்திட்டங்களுக்குத் தோள் கொடுத்துக் கடமையாற்றும் ஆர்வமும் தகுதியும் கொண்ட வேட்பாளர்களை இனம் கண்டு தெரிந்தெடுப்பதில் பங்கு கொண்டு உங்கள் வரலாற்றுக் கடமையைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

வாக்களிப்பு நிலையங்களுக்கான இட ஒழுங்கு, தொண்டர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்வதில் நீங்கள் அனைவரும், எமக்கு உறுதுணையாக இருந்து உதவவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஈழத்தமிழர் அல்லாதவர்களும்; வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்ற வேண்டியிருப்பதால் அவர்கள் உதவியையும் பெற்றுத்தர நீங்கள் முன்வந்து உதவலாம். அவர்கள் முன்னிலையில் வாக்களிப்பு நடைபெறுவது தேர்தல் நிர்வாகத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.

அவுஸ்திரேலியாவிலிருந்து பத்து மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படும் இத் தேர்தலில், வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புபவர்கள், தேர்தல் ஆணையத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களுக்கான தகமைகள் அனைத்தையும் கொண்டிருக்கவேண்டும்.

மேற்கு, தெற்கு அவுஸ்திரேலியாவின் பரப்பளவும் மக்கள் தொகையும் பாரியவை. இவ்விரு பிரிவுகளையும் ஒரே அரசவை அங்கத்தவர் பிரிதிநிதித்துவப் படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றதாகக் காணப்படுகிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் நடைமுறைக் கைநூல் விதிமுறைகளுக்கு இணங்க, அவுஸ்திரேலியாவின் மேற்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளையும் தனித் தனியே ஒவ்வொரு அங்கத்துவ மாவட்டப் பிரிவுகளாகப் பிரிப்பதற்கு அவுஸ்திரேலியத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

இம் முடிவிற்கிணங்க, 4 அரசவை அங்கத்தவர் தொகுதியான நியுசவுத்வேல்ஸ் தேர்தல் தொகுதி 3 அரசவை அங்கத்தவர் தொகுதியாக மாற்றி அமைக்கப்பட்டது. தெற்கு அவுஸ்திரேலியாவிற்கு வேட்பாளர் மனுக் கிடைக்கப்படாதவிடத்து அதே பிராந்தியத்திலிருந்து வேட்பாளர் மனு ஏற்றுக் கொள்ளப்படும்.

தேர்தல் தொடர்பான முக்கிய திகதிகள் கீழே பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன:
1. பாராளுமன்றம் கலைப்பு ஒக்டோபர் 01, 2013
2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02, 2013
3. வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் ஒக்டோபர் 08, 2013
4. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாள் ஒக்டோபர் 10, 2013
5. வேட்பாளர் மனு மீளப் பெறும் இறுதி நாள் ஒக்டோபர் 12, 2013
6. நா.க.த. அரசாங்கத்தின் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 26, 2013


இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவுஸ்றேலிய பிராந்தியத்துக்கான தேர்தல் ஆணையாளரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ad

ad