புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

தூத்துக்குடி விமானத்தில் தீப்பற்றியது! 2 எம்.எல்.ஏ.க்கள் தப்பினர்!
தூத்துக்குடியில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து அவசர அவசரமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். இதில், 2 எம்எல்ஏக்கள் உட்பட 67 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.


சென்னை - தூத்துக்குடி இடையே ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானம் தினமும் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இன்று (3.9.2013) காலை, சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த விமானத்தில் தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், சமக எம்எல்ஏ  எர்ணாவூர் நாராயணன், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபை தலைவர் நடராஜன் உட்பட 67 பயணிகள் வந்தனர். 
ஸ்பைஸ் ஜெட் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தரையிறங்கி,  ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென புகை பரவியது. இதனால் பயணிகளிடையே பதட்டம் ஏற்பட்டது. இதனை அறிந்த பைலட், கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக 3 தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.
பைலட்டின் சாமர்த்திய நடவடிக்கையால் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. உடனடியாக பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். பின்னர் விமானத்தின் தீப்பிடித்த பகுதி அணைக்கப்பட்டது. 
இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. 

ad

ad