புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

வேழமாலிதனும் பொன்காந்தனும் பொலிசாருக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க மறுப்பு! சட்டத்தரணி தவராசா நீதிமன்றில் காட்டம்
2013ம் ஆண்டு தை மாதம் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனின், செயளாலரான பொன்காந்தனும்
பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாருக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க விருப்பவில்லை..
என்பதை சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி நிரோசா பெர்னான்டேர்வின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன்,
மேலும் தனது வாதத்தில் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார், பொலிஸ் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கின் நான்காம் ஜந்தாம் சந்தேக நபர்களான வேழமாலிதன், பொன்காந்தன் ஆகிய இருவரிடமும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பதிவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஆனால் வேழலமாலிதனும் பொன்காந்தனும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பொலிசாருக்கு சுய விருப்பத்தில் வழங்க விரும்பவில்லையெனவும்,
4ம். 5ம் சந்தேக நபர்களின் சுய விருப்பமின்றி அச்சுறுத்தல் மூலம் பலாத்காரமாக பொலிசார் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பெற்று அந்த வாக்குமூலங்களை மேல் நீதிமன்றில் முக்கிய சான்றாக பாவிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
பொன்காந்தனையும் வேழமாலிதனையும் கைது செய்து விசாரணைகள் நடாத்தியபோதிலும் எந்தவித சான்றுகளும் இல்லாத நிலையில், தடுத்து வைத்துள்ளமையையும் நியாயப்படுத்தவே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெற பொலிசார் முனைகின்றனர்.
எனவே 4ம், 5ம் சந்தேக நபர்களான வேழமாலிதனும் பொன்காந்தனும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பொலிசாருக்கு சுய விருப்பத்தில் வழங்க விரும்பவில்லையென்பதை இந்த நீதிமன்றம் வழக்குக் கோவையில் பதியும்படி நீதிமன்றத்தை சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வேண்டிக் கொண்டதையடுத்து,
கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி நீதிபதி நிரோசா பெர்னான்டோ 4ம், 5ம் சந்தேக நபர்களான, வேழமாலிதனும் பொன்காந்தனும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பொலிசாருக்கு வழங்க விரும்பவில்லையென வழக்குக் கோவையில் பதிந்து மேலதிக விசாரணையை ஐப்பசி மாதம் 10ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ad

ad