புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013

23 வருடங்களின் பின் யாழ்தேவி இன்று கிளிநொச்சி செல்கிறது! ஜனாதிபதியும் பயணிக்கிறார்


ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, கிளிநொச்சி ரயில் நிலையம், சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும் ஜனாதிபதி அவர்கள், ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்திலும் அவர்
உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி, சுன்னாகத்தில் 1800 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கும் உப மின் உற்பத்தி நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.
1990 ம் ஆண்டுடன் வடபகுதிக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. 
தற்போது 23  வருடங்களின் பின்னர்  வடபகுதிக்கான ரயில் சேவைகள் கிளிநொச்சி வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாளை 15 ம் திகதி முதல் பயணிகளுக்கான ரயில் சேவைகள் கிளிநொச்சி வரை இடம்பெறவுள்ளன.
அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று 14 ம் திகதி சுன்னாகம் உப மின் நிலையத்தை மக்களிடம் கையளிக்கிறார்.
இதன்மூலம் முழு யாழ்ப்பாண தீபகற்பத்துக்கும் மின்சாரம் கிடைக்குமென மின் சக்தி, எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

ad

ad