புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2013

இன்று தியாகி திலீபனின் நினைவு நாள் 

இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்த திலீபனிடம் தன் அகிம்சை முகமூடி கிழிந்த நிலையில் தோற்றுப்போன பாரதத்தின் துரோகம் இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் தியாகி திலீபனால் உலகுக்கு கோடிட்டு காட்டப்பட்ட நாள் செப்டம்பர் 26, 1987! 


தியாகத்தின் பெயர் இனி திலீபன் என சொல்ல வைத்த எங்கள் தியாகி திலீபனின் நினைவுகளில் இந்த நாட்களில் எங்கள் இதயங்கள் கனக்கின்றன. ஆன்மா நடுங்குகின்றது. ஆனாலும் தேசிய ஆன்மா புரட்சியில் வெடிக்கக் காத்திருக்கின்றது. உலகெங்கும் தமிழினத்துக்கு நன்மையான சேதிகள் வந்து சேர எழுச்சி உணர்வில் தமிழினம் திலீபனின் எழுச்சி உணர்வேற்று எழுகை கொள்கின்றது.

26 ஆண்டுகள் என்ன இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் திலீபன் ஏற்றி வைத்த விடுதலை தீ ஒரு போதும் அணையாது வரலாற்றில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவுகள் கால ஓட்டத்தாலும் கட்டிப் போடமுடியாத காலத்தின் எழுச்சி அலை. காந்தி தேசத்தின் காந்தியம் மாந்த நேயம் தோற்றுப்போனது எங்கள் தியாகத்தின் பிள்ளையாம் பார்தீபனிடம்! இவனது பிறப்பு வரலாற்றின் மகா உன்னதம். இவனின் மறைவு உலக வரலாறுகள் இதுவரை கண்டிராத மகா தியாகம். இந்தியத்தின் கோர கொலை வெறியை தோலுரித்து காட்ட எங்கள் தேச வைத்தியன் தன் உயிர் கரைத்து வைத்தியம் செய்தான். தெளிந்த அரசியல் ஞானமும் தீர்க்க தரிசனமும் தளராத உறுதியும் இவனை மக்களுள் மக்களாக பயணித்து மக்கள் படைக்கட்டமைப்புகளை கட்டி எழுப்பி செயல்வீரம் கொண்ட தளபதியாக்கியாக்கியது. தலைமைத்துவப் பண்பிலும் சிறந்து விளங்கினான். எம் இனத்துக்கு வேராக செயல்படும் தொண்டனாகவும் எளிமை கோலங்கள் காட்டி இதயங்களை வென்றான்.

"தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி" என்று அன்று திலீபனின் மரணம் குறித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையானவை.சிவவதனி 

ad

ad