புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2013

குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை-
தங்கைக்கு எழுதிய உருக்கமான கடிதம்

thx nakeeran
 

 அறந்தாங்கி அருகே இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 அறந்தாங்கியை அடுத்த சிலட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ரமேஷ்.வயது 35. இவரது மனைவி சீதா. வயது 28. இவர்களது மகன் முத்தீஸ்.வயது 5. மகள்    அஜீதா.வயது இரண்டரை.
 ரமேஷ் சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார். இந்த அனுபவத்தைக் கொண்டு இவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வந்துள்ளார். இந்நிலையில் தற்போது சிலட்டூரில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
 நேற்று வியாழக்கிழமை ரமேஷ் தனது மகன் முத்தீஸை அறந்தாங்கியில் உள்ள தனது தங்கை மகேந்திரன் மனைவி சுமதி என்பவரது வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு சிலட்டூர் வந்துள்ளார்.
 இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரமேஷ், அவரது மனைவி சீதா, மகள் அஜீதா ஆகியோர் தனித்தனியாக அவர்களது வீட்டில் மின்விசிறி மாட்டக் கூடிய கம்பியில், கயிற்றால் தூக்கிட்ட நிலையில் பிணமாக் கிடந்தனர். முதலில் ரமேஷ் தனது மகள் அஜீதாவை தூக்கில் தொங்கவிட்ட பிறகு, அவரும், அவரது மனைவியும் தற்கொலை தூக்கிட்டு, செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 இதுகுறித்து ரமேஷின் பெரியப்பா காசிவிஸ்வநாதன்; அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி சம்பவ இடத்திற்கு சென்று, ரமேஷ், சீதா, அஜீதா ஆகியோரின் பிணங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் ரமேஷ் குடும்பத்தினரின் சாவிற்கு காரணம் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
                 தற்கொலைக்கு காரணம் என்ன?


 தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் குடும்பம் பொருளாதார ரீதியாக வளம்மிக்க குடும்பமாகும். இதனால் ரமேஷிற்கு கடன் தொந்தரவு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ரமேஷிற்கும், அவரது மனைவியும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தியுள்ளனர். இதனால் குடும்ப ரீதியாகவும் ரமேஷிற்கு பிரச்சினைகள் இல்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
 எவ்வித பிரச்சினையும் இல்லாதநிலையில், ரமேஷ் மகனை மட்டும் தனது தங்கை வீட்டில் பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு, தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் குழப்பத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.


                தங்கைக்கு எழுதிய உருக்கமான கடிதம்..
 மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட ரமேஷ், தனது சட்டைப் பையில் ஒரு கடிதம் வைத்திருந்தார். அந்த கடிதத்தில், ''பீரோவில் டைரி உள்ளது. அதை சுமதியிடம் கொடுக்கவும். சுமதி, முத்தீஸை நன்றாக பார்த்துக் கொள்ளவும்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் ரமேஷ் உருக்கமாக எழுதியுள்ளார்.
 ரமேஷ் சட்டைப்பையில் இருந்த கடிதம் மற்றும் ரமேஷ் குறிப்பிட்டபடி பீரோவில் இருந்த டைரி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். ரமேஷ் சட்டைப்பையில் இருந்த கடிதம் மற்றும் ரமேஷ் குறிப்பிட்டபடி பீரோவில் இருந்த டைரி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
 ரமேஷ் எழுதியுள்ள அந்த டைரியில், ரமேஷ் சுமதி, நான் அம்மா(ரமேஷின்அம்மா ஏற்கனவே இறந்து விட்டார்) சென்ற இடத்திற்கே செல்கிறேன். என்னை மன்னித்து விடு. முத்தீஸை நன்றாக படிக்க வைத்து பெரியாளாக ஆக்கு. இப்படிக்கு..ரமேஷ் என்றும் ரமேஷ் எழுதியிருந்தார். மேலும் டைரியில் தனது வரவு-செலவு விபரங்களை குறித்து வைத்திருந்தார்.

ad

ad