புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013


நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் ப்ளாட் தலைவர் சித்தார்த்தன் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்  . நீண்ட காலமாக வவுனியாவை பின்தளமாக  கொண்டியங்கும் இவர் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றது  பற்றி அவரே கூறுகிறார் 
இந்த வெற்றிவாய்ப்பு குறித்து “அதிரடி” இணையம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் வினவியபோது,நன்றி அதிரடி 
tna.membersதமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இத்தேர்தலில் வெற்றியடைவோம்
என்பது எமக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. இருந்த போதிலும் அறுதிப் பெரும்பான்மையுடன் நாம் வெற்றியீட்டினால் தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும், இதற்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றும் நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று,
அறுதிப் பெரும்பான்மை வெற்றியீட்டுவதற்காக, தமிழ் மக்கள் “தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு” வாக்களித்த மக்கள் அனைவருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நான் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், வடமாகாண சபையின் சகல மாவட்டங்களிலும் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிரடி இணையம், “வவுனியாவில் உங்களுக்கு அதாவது, புளொட் அமைப்புக்கு செல்வாக்கு இருக்கக்கூடிய நிலையில் நீங்கள் யாழ்ப்பாணத்தில் வந்து இத்தேர்தலில் போட்டியிட்டதன் காரணமென்ன?” என்று கேட்கப்பட்ட போது,
“இது ஒரு தவறான கருத்து, அதாவது புளொட் அமைப்புக்கு வவுனியாவில் மட்டும்தான் செல்வாக்கு இருக்கிறது என்ற ஒரு தவறான கருத்து இருக்கின்றது. இக் கருத்தினை முறியடிப்பதற்கு, சகல பிரதேசங்களிலும் நாம் மக்கள் செல்வாக்கோடு தான் இருக்கின்றோம் என்பதற்காகவே நான் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டேன்” என தெரிவித்தார்.
-

ad

ad