புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

ஜெயலலிதா, அமிதாப், ஸ்ரீதேவி உட்பட 41 பேருக்கு பதக்கங்களை வழங்கினார் பிரணாப் முகர்ஜி
முதல்வர் ஜெயலலிதா உள்பட திரைத் துறையில் சாதனை படைத்த 41 பேருக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விழா பதக்கங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.


சென்னையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை தலைமை விருந்தினராக பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். விழாவில், முதல்வர் ஜெயலலிதா உள்பட 41 பேருக்கு பதக்கங்களை அவர் வழங்கினார். 
முதல்வர் ஜெயலலிதா, மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகை ஸ்ரீதேவி, திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், பழம்பெரும் நடிகைகள் வைஜயந்தி மாலா, அஞ்சலி தேவி, திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர், திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத், இயக்குநர், கேலி சித்திரக்காரர் கே.பாபு, திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் கே.ராகவேந்திர ராவ், கர்நாடகத்தில் 86 படங்களுக்கும் மேல் தயாரித்த பர்வதம்மா ராஜ்குமார், நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன், மூத்த நடிகர் அம்பரிஷ், மகாத்மா காந்தி பிக்சர்ஸ் சங்கர் சிங்கின் மகன் எஸ்.வி.ராஜேந்திர சிங் பாபு, திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் துவாரகேஷ், பி.ரவிச்சந்திரன்,
திரைப்பட வெளியீட்டாளர் வீரண்ணா, நடிகர் மாதவன் நாயர் மது, மலையாள திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட தயாரிப்பாளர் சந்திரன், மலையாள நடிகர் குன்ஜாக்க போபன், மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி, மோகன்லால், இந்தித் திரைப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மூத்த நடிகர் கிரண் வி.சாந்தா ராம், ரன்தீர் ராஜ்கபூர், ரமேஷ் சிப்பி, திரைப்பட வெளியீட்டாளர்கள் கமல் பன்ஜட்டியா, விஜய்குமார் சுப்ளே, கவிஞர் ஜாவித் அக்தர், மராத்தி நடிகர் ரமேஷ் தியோ, நடிகை சீமா தியோ, வங்க மொழி திரைப்பட நடிகை அபர்ணா சென், திரைப்பட இயக்குநர் கௌதம் கோஷ், நடிகர் பிரன்ஜித் சாட்டர்ஜி, குஜராத் நடிகர் நரேஷ் கனோடியா, பஞ்சாபி நடிகை ப்ரீத்தி சாப்ரூ, ஒரிசா திரைப்பட கலைஞர் உத்தம் மகந்தி, போஜ்புரி நடிகர் மனோஜ் திவார், அசாமி மொழி திரைப்பட நடிகை சரிபா வாகித் ஆகியோருக்கு வழங்கினார்.

ad

ad