புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2013

பள்ளிக்கூடத்தில் ரேக்கிங்: 5 மணி நேரம் கழிவறையில் அடைப்பு: 11 வயது மாணவி உயிரிழப்பு
கொல்கத்தாவில் ராகிங் காரணமாக 11 வயது மாணவி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்கூட வகுப்பறைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


கொல்கத்தாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 11 வயது பள்ளி மாணவியிடம், மூத்த மாணவர்கள் 100 ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். பணம் தர மறுத்ததால் அந்த மாணவியை கழிவறையில் அடைத்து பூட்டினர். சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு இந்த செய்தி அறிந்து அந்த மாணவியை மீட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பள்ளி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று பள்ளிக்குள் நுழைந்த அவர்கள் வகுப்பறைக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். 
பள்ளி முதல்வரை முற்றுகையிட்ட உறவினர்கள், மாணவி உயிரிழப்புக்கு காரணமாக மாணவரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியேற்றினர்.

ad

ad