புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தும் அமெரிக்கா உட்பட 5 நாடுகள் புலிகளுக்கு ஆயுதங்களை விற்றுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளன. குறிப்பாக ஐந்து நாடுகள் இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர்த் தளபாடங்களும், தொடர்பாடல் சாதனங்களும் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
1400 பில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளன.
இந்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் புலிகள் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு.
ராடார் ஒன்றை அமெரிக்காவிடமும், அதி நவீன தொடர்பாடல் சாதனங்களை நோர்வேயிடமும் புலிகள் கொள்வனவு செய்திருந்தனர் என சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad