புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2013

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மாணவி
கொலை வழக்கு தீர்ப்பு: வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு
டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான ராம்சிங், வினய், அக்க்ஷய், முகேஷ், பவன் மற்றும் மைனர் சிறுவன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 



மைனர் சிறுவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடந்தது. மற்ற 5 வாலிபர்களும் விரைவு நீதிமன்றத் தில் விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங் கடந்த மார்ச் மாதம் 11–ந் தேதி டெல்லி திகார் ஜெயிலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மைனர் சிறுவன் மீதான விசாரணை கடந்த மாதம் 31–ந்தேதி முடிந்தது. அவனுக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நேற்று 4 வாலிபர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி அறிவித்து இருந்தார். 4 வாலிபர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிபதி யோகேஷ் கன்னா தீர்ப்பளித்தார்.
மேலும் அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை இன்று இருதரப்பு வாதங்களின்படி அறிவிப்பதாகவும் நீதிபதி கூறினார். நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்த மாணவியின் தாயும், தந்தையும் 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.
4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக குரல் எழுந்துள்ளது. இதனால் இன்று தீர்ப்பு விவரத்தை அறிய கோர்ட்டில் ஏராளமான மக்கள் கூட்டம் திரண்டது.
இதைத் தொடர்ந்து கோர்ட் வளாகத்திலும், கோர்ட்டை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குற்றவாளிகளான 4 வாலிபர்களும் திகார் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

ad

ad