புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

9ஆம் தேதி 'கோச்சடையான்' பட டிரைலர் வெளியீடு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் வரும் 9ஆம் தேதி நடக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள படம் ‘கோச்சடையான்’. இந்த படத்தின் டைரக் ஷன் மேற்பார்வையை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துள்ளார்.


படத்தின் படப்பிடிப்பு லண்டன், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடந்தது. படத்தில் சரத்குமார், நாசர், ஆதி, தீபிகா படுகோனே, ஷோபனா, ருக்மணி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

‘மோசன் கேப்சர்’ டெக்னாலஜி நவீன தொழில்நுட்பத்தில் இந்த படம் தயாராகி இருக்கிறது. படம் முழுக்க ‘கிராபிக்ஸ்’ நுட்பங்கள் நிறைந்துள்ளன.


இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் வரும் 9ஆம் தேதி நடக்கிறது. இந்த விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வைரமுத்து உள்பட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

ad

ad