புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013



           வ்வொரு எம்.பி. தேர்தல் நெருங்கும்போதும் டெல்லியின் பார்வை தமிழகத்தின் மீது அழுத்தமாகப் பதிவது வழக்கம்தான். காங்கிரஸ் கட்சி கழுகுப் பார்வையோடு தமிழ்நாட்டைப் பார்க்கிறது என்று நம்மிடம் சொன்ன அந்த கர்நாடக எம்.பி (நடிகை குத்து ரம்யா அல்ல),
""உங்க மாநிலத்தில் உள்ள சீட்டுகள்தான் 2004-விலும் 2009-விலும் காங்கிரஸ் நக்கீரன் naதலைமையிலான ஆட்சி அமையக் காரணம். சும்மாவா, 40 தொகுதிகள் இருக்குதே. அதனால எங்க கட்சித் தலைமை அதில் பெருமளவு தனக்கு சாதகமாக அமையணும்னு எதிர்பார்க்குது. அதற்காக ஒரு மெகா கூட்டணி அமைக்கணும்னு கணக்குப் போட்டி ருக்குது. அதற்கான நேரடி மூவ்களும் ரகசிய காய் நகர்த்தல்களும் நடந்துக்கிட்டுத்தான் இருக்குது'' என்றார்.

அவரைப் போலவே ஹரியானா மாநில எம்.பி. ஒருவரும் டெல்லி எம்.பி. ஒருவரும் தமிழகத்தை நோக்கி காங்கிரஸ் தலைமை கவனம் செலுத்துவது பற்றி சொன்னதால், அது பற்றி முழுமையாக விசாரித்தோம். ஆகஸ்ட் 25-ந் தேதி விஜயகாந்த் பிறந்தநாளுக்கு ராகுல்காந்தி ஃபேக்ஸ் மூலம் வாழ்த்து சொன்னபோது அது அரசியல் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. காங்கிரஸ்-தே.மு.தி.க புது அணியாகத் தமிழகத்தில் களமிறங்கப்போகிறது என்ற பேச்சுகள் ஒரு பக்கம் பரவ, தே.மு.தி.க தரப்பில் தங்கள் தலைவருக்கு ராகுல்காந்தியே வாழ்த்து சொல்லிவிட்டார் என உற்சாகம் கரைபுரண்டது.

செப்டம்பர் 1-ந் தேதி நடந்த தே.மு.தி.க செயற்குழு கூட்டத்  தையும் டெல்லி காங்கிரஸ் தலைமை உன்னிப்பாக கவனித்தது. அங்கு நடந்த விவாதங்கள் உடனுக்குடன் இங்கே தெரியவந்தன. அவைத் தலைவர் பண்ருட்டி  ராமச்சந்திரனின் தாமதமான வருகை, அது கிளப்பிய சர்ச்சை, உடல்நலக்குறைவால் பிரேமலதா வராமல் போனது என எல்லாமும் டயம் டூ டயம் ரிப்போர்ட்டாக டெல்லியை எட்டிக்கொண்டே இருந்தது. லேட்டாக வந்த பண்ருட்டியார் பேசும்போது, ""தேர்தல் நேர சூழல் எப்படி இருக்கும்னு முன்கூட்டியே சொல்ல முடியாது. போனமுறை தி.மு.க ஆட்சி 4 வருசகாலத்துக்கு நல்லாத்தான் இருந்தது. கடைசி ஒரு வருடத்தில்தான் நிலைமை மாறியது. இப்ப எம்.பி தேர்தல் நிலைமையும் அப்படித்தான். தேர்தலுக்கு 3 மாதம் முன்புவரை எதையும் கணிக்கமுடியாது. 91-ல் ராஜீவ்காந்தி கொல்லப்படும்வரை இருந்த நிலைமை வேறு. அவர் படுகொலை செய்யப்பட்டதும் நிலைமை அப்படியே மாறி விட்டது. அதுபோல இப்ப வும் பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டில் எது வரும்னு சொல்லமுடியாது. அதனால அவசரப் பட வேண்டாம்'' என்று சொன்னதும் டெல்லிக்கு வந்து சேர்ந்தது.



செயற்குழு வில் பேசிய பலரும், ஜெ.வை எதிர்கொள் வதற்காக தி.மு.க.வுடனான கூட்டணி பற்றி பேசியதையும் விஜயகாந்த்தும் அதனைத் தொட்டு பேசியபின் போகிற போக்கில், "மண்டபத்தை இடிச்சவங்களோடு கூட்டணி வச்சிக்கணும்னு சொல் றீங்க' என தனது டிரேட்மார்க்  சிரிப்போடு சொன்னவர், "உங்க கருத்துகளை மனதில் வச்சி நான் நல்ல முடிவா எடுக்கிறேன்'னு சொன்னதும் காங்கிரஸ் தலைமை யின் கவனத்திற்கு வந்துள்ளது. ""தமிழக மீடியாக்களில் கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ்-தே.மு.தி.க பற்றிய செய்திகள் வந்துகொண்டி ருந்தாலும்  15 நாட்களுக்கு முன்பே டெல்லி காங்கிரஸ் தலைமை தி.மு.க-காங்கிரஸ்-தே.மு.தி.க என்கிற மெகா கூட்டணிக்கான காய் நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டது. அதை முன்னின்று செய்பவர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திதான்'' என்றார் அந்த டெல்லி எம்.பி.

ராகுலுக்கு நெருக்கமானவ ரான ஹரியானா எம்.பியும் இதை உறுதிப்படுத்தியதோடு, ஒரு முக்கியமான சந்திப்பு பற்றியும் தெரிவித்தார். ""தமிழ்நாட்டில் காங்கிரஸ் கணிசமா ஜெயிக்க ணும்னா நல்ல  கூட்டணி வேணும். தி.மு.க. -காங்கிரஸ் -தே.மு.தி.க.ன்னு கூட்டணி அமைந்தால் அது வலுவா இருக்கும்னு ராகுல் நினைக்கிறார். பொதுவா அவருக்கு தி.மு.க.வோட நெருக்கம் கிடையாது. ஆனா, 2014 தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தால் அவர்தான் பிரதமர்ங்கிறதால தி.மு.கவோடு கூட்டணி அமைக்கவேண்டியதோட அவசியத்தை உணர்ந்திருக்கிறார். அது சம்பந்தமாகத்தான் ராகுல்காந்தி, தி.மு.க ராஜ்யசபா எம்.பி கனி மொழிகிட்டே பேசினார். ராகுல் வீட்டில்தான் இந்த சந்திப்பு நடந்தது. எங்க காங்கிரஸ் சீனியர் லீடர்களுக்கே இந்த சந்திப்பு பற்றி தெரியாது. தெரிஞ்சவங்ககிட்டேயும் மரியாதை நிமித்தமான சந் திப்புன்னு சொல்லிட்டாங்க. ஆனா, தேர்தல் கூட்டணி பற்றித்தான் ராகுலும் கனிமொழியும் முதல்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தினாங்க.

யாருக்கு எவ்வளவு சீட் என்பதெல்லாம் இன்னும் பேசப் படலை. மூன்று கட்சிகளும் ஓரணியில் இருப்பது பற்றியும் அதில் உள்ள சிக்கல்களை எதிர்கொள்வது பற்றியும் பேசியிருக்காங்க. தேர்தல் நேரத்தில் 2ஜி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்பதால், ஆ.ராசாவை இந்த முறை போட்டியிடச் செய்யவேண்டாம்னு ராகுல் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்குது. இதை கலைஞர்ஜிகிட்டே சொல்லுங்கன்னு ராகுல் சொன்னதைக் கேட்டுக்கொண்ட கனிமொழி, "எல்லாத்தையும் எங்க தலைவர்கிட்டே சொல்றேன்'னு சொல்லியிருக்காரு. இந்த சந்திப்பின் எஃபெக்ட்டை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவான ஜே.பி.சியின் புதிய உறுப்பினர் நியமனத்தில் நீங்களே பார்த்திருப்பீங்களே'' என்றார் ஹரியானா எம்.பி. நம்மிடம்.

ஜே.பி.சி.யின் தலைவரான காங்கிரஸ் எம்.பி. பி.சி.சாக்கோ கடைசிவரை பிரதமரையும் ப.சிதம்பரத்தையும் விசாரணைக்கு அழைக்கவில்லை. ஆ.ராசா நேரில் சாட்சியமளிக்கவும் அனுமதிக்க வில்லை. ஜே.பி.சி.யில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலி யுறுத்தியும் சாக்கோ அசைந்துகொடுக்கவில்லை. இந்த நிலையில்தான், ஜே.பி.சி.யின் தி.மு.க. உறுப்பினரான திருச்சி சிவாவின் ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் முடிவடைந்தது. அவருக்குப் பதில் அதே கட்சியைச் சேர்ந்த வசந்தி ஸ்டான்லி நியமிக்கப்படுவார் என்று டெல்லியில் செய்திகள் பரவி, பத்திரிகைகளிலும் வெளியாயின. ஆனால், அமைச்சராகிவிட்ட காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுக்குப் பதிலாக ப்ரதீப் பட்டாச்சார்யா என்ற அதே கட்சியின் எம்.பி.யை ஜே.பி.சி. உறுப்பினராக்கிய மத்திய அரசு, திருச்சி சிவாவுக்குப் பதில் நியமன எம்.பி அசோக் எஸ் கங்குலி என்பவரை நியமித்தது. 

இந்த நியமனத்தை எதிர்த்து ராஜ்யசபாவில் பா.ஜ.கவும் இடதுசாரிகளும் குரல் கொடுத்தனர். அ.தி.மு.க தரப்பிலும் ஜே.பி.சி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2ஜி-யில் பெரும் பாதிப்படைந்துள்ள கட்சியான தி.மு.க தன்னுடைய உரிமை பற்றி ராஜ்யசபாவில் வாயே திறக்க வில்லை. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டபோது, நாடாளு மன்ற மைய மண்டபத்தில் தி.மு.க உறுப்பினர் களிடம் பா.ஜ.க, இடதுசாரி எம்.பிக்கள் பலரும் "ஏன் இந்த நியமனத்திற்கு உங்கள் எதிர்ப்பைக் காட்டவில்லை. இது உங்கள் உரிமையில்லையா?' என்று கேட்டபோது, தி.மு.க எம்.பிக்கள் சமாளித்தபடி சென்றதை பார்க்க முடிந்தது. 

ஜே.பி.சி.க்கு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் காலஅவகாசம் தரப்பட்டுள்ளது. அதன் தலைவர் சாக்கோ, ஆ.ராசா அளித்துள்ள அறிக்கையை தன்னுடைய ரிப்போர்ட்டில் சேர்ப்பதில்லை என்ற நிலையில் இருக்கிறார். ஆக, ஜே.பி.சி. அறிக்கை என்பது பிரதமர், ப.சிதம்பரம் உள்ளிட்ட யாரையும் சேர்க்காமல் ஆ.ராசாவை மையப்படுத்தியதாக இருக்கும் என்பதால் இதனை எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்க்கின்றன. 

2ஜியை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. ஸ்பெஷல் கோர்ட் கடந்த புதனன்று இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை அழைத்து விசாரித்தது. உச்சநீதிமன்ற கண்காணிப்புடன் நடைபெறும் இவ்வழக்கினை விரைவாக முடிப்பதில் சி.பி.ஐயும் மத்திய அரசும் தீவிரமாக இருக்கும் நிலையில், 2ஜி வழக்கு தொடர்பான முறையீட்டு மனுக்கள் எதுவும் ஹைகோர்ட் உள்பட எந்த கோர்ட்டிலும் தாக்கல் செய்யக்கூடாது என்றும் தங்கள் பெஞ்ச் முன்புதான் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, ராதாகிருஷ்ணன் பெஞ்ச் செவ்வாயன்று மீண்டும் உறுதிப் படுத்தியது.

ஹைகோர்ட்டில் மனு செய்ய உரிமை இருக்கிறது என சாகித் பால்வாவும் மற்றவர்களும் தாக்கல் செய்த மனுவில்தான் அந்த பெஞ்ச் இப்படி உத்தரவிட்டது. கலைஞர் டி.வி. தொடர்பான பணப்பரிவர்த்தனை எதிலும் தனக்குத் தொடர்பில்லை என்பதால் தன்னை இவ்வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என கனிமொழி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

கனிமொழி மனு மீதான தீர்ப்பை ஆ.ராசா தரப்பு எதிர்பார்க்கிறது. கனிமொழி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டால் பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டு அடிபடுகிறது, அடுத்து  2ஜி ஒதுக்கீட்டின் நடைமுறை தொடர்பான குற்றச்சாட்டுகள் மட்டும்தான். அது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால், விசாரணையின் ஒவ்வொரு கட்டத்தையும் ராசா தரப்பு உன்னிப்பாக கவனிக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நாள்தோறும் விசாரணை நடந்துவரும் நிலையில் ஆ.ராசா தரப்பில் பிரதமரையும் ப.சிதம்பரத்தையும் சாட்சிகளாக விசாரிக்க வேண்டும் எனக் கோரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தலைமைக்கும் இருக்கிறது. 2ஜி வழக்கை சுப்ரீம் கோர்ட்டிற்கு எடுத்துச் சென்ற சுப்ரமணியசாமி தனது புதிய அரசியல் புகலிடமான பா.ஜ.க.வின் சீனியர்களிடம் பேசும்போது, ""ஜே.பி.சி.க்கு ராசா கொடுத்த அறிக் கையை ரிப்போர்ட்டில் சேர்க்கமாட் டார்கள். ஏனென்றால் 2ஜி.யில் பிரதமருக்கும் ப.சி.க்கும் உள்ள தொடர்பு பற்றி அதில் முழுமையாக இருக்குது. அதனால கோர்ட்டின் கவனத்திற்கு ராசாவின் அறிக்கையை கொண்டு போவேன்'' என்று சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு சூழல் வந்தால் என்ன செய்வது என்பது பற்றியும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்கிறார்கள் டெல்லி  காங்கிரஸ் தலைவர்கள். 

2014 எம்.பி. தேர்தலில் 2ஜி விவகாரம் தங்களுக்கு எதிராக வரக் கூடாது என கவனமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் வெற்றி வாய்ப்பைக் கருதி தி.மு.கவுடனும் தே.மு.தி.கவுடனும் கைகோர்க்க கணக்குப் போடுகிறது. இந்தக் கூட்டணிக் கணக்கிற்காக ஆ.ராசா கைவிடப்படுவாரா, அவர் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வந்தபோது சால்வை அணிவித்து வாழ்த்திய கலைஞர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக டெல்லி அரசியலில் அலசப்படுகிறது.

ad

ad