வியாழன், செப்டம்பர் 12, 2013

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்! ஜெனீவாவில் இந்தியா தெரிவிப்பு
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது கூட்டத் தொடரில்,  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது  இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையினை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூட்டத் தொடரில் இந்தியப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தீவுக்கான பயணம் குறித்த தனது அவதானிப்பினை, கூட்டத் தொடரில் பின்னர் சமர்ப்பிப்பதாக ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் கூட்டத் தொடரின் முதன்நாள் அமர்வில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கூட்டத்தொடர் அமர்வில் உரை நிகழ்த்திய இந்தியப் பிரதிநதி, இலங்கைக்கான ஐ.நா ஆணையாளரின் பயணம் பூர்த்தியானதை தாங்கள் வரவேற்றுக் கொள்வதாகும் எனத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை சிரியா விவகாரம் குறித்தும் தங்களது நிலைப்பாட்டினை சபையில் பதிவு செய்த இந்தியா, போரின் மூலம் சிரியாவின் நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது எனத் தெரிவித்திருந்ததோடு, உலகளவில் இரசாயனக் குண்டுகளின் பயன்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளதெனத் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் தமிழர்கள் மீதான சிறிலங்காப் படைகளின் போரின் போது இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதென குற்றச்சாட்டு உள்ளதென்பது இங்கு குறிப்பிடதக்கது.