புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2013

ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினர் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு

பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை நடந்து 2 மாதம் ஆகியும் கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கவில்லை.



இந்த கொலை வழக்கை தமிழக சிறப்பு புலனாய்வு குழு ஐ.ஜி.மகேஸ்குமார் அகர்வால் தலைமையில், போலீஸ் சூப்பிரெண்டுகள் அன்பு, நாகஜோதி, விஜயக்குமாரி, சாந்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்களை தவிர 40 பேர் கொண்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அடங்கி குழுவினரும், தனித்தனியே பல கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.  ரவுடிகள், கொலை வழக்குகளில் சிறை சென்றவர்கள், ஆட்களை கடத்தி கொலை செய்தவர்கள் என 400–க்கும் மேற்பட்டோரை இவர்கள் அழைத்து விசாரித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள், இவர்கள் வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பனையும் கொன்றுள்ளனர். ரமேஷ் உடலில் 24 வெட்டுக்காயம் இருந்தது போல் வெள்ளையப்பன் உடலிலும் 24 வெட்டுக்காயம் இருந்தது. இந்த இரண்டு உடல்களில் உள்ள காயங்களை வைத்து விசாரித்த போலீசார் இரண்டு கொலைகளையும் ஒரே கும்பல்தான் செய்துள்ளது என முடிவு செய்துள்ளனர்.
வெள்ளையப்பனை கொலையாளிகள் கொலை செய்தபோது கொலை யாளிகளை பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். இவர்கள் போலீசாரிடம் வந்து கொலையாளிகள் பற்றி அடையாளம் கூறிஉள்ளனர்.
இதை வைத்து கொலையாளிகள் புகைப்படங்கள் அச்சடித்து தமிழகம், கார்நாடகம், கேரளா, ஆந்தரா என அனைத்து பகுதியிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமேஷ் கொலை வழக்கு விசாரணை குறித்து போலீசார் கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலம் மங்களூர் மற்றும் பெங்களூரில் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.
கடந்த 2 நாட்களாக போலீஸ் சூப்பிரெண்டுகள் அன்பு, சாந்தி ஆகியோர் சேலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.  ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினருக்கும், அவரது அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர ஆடிட்டர் ரமேசின் தம்பியும், ஆடிட்டருமான சேசாத்திரிக்கும், கொலையை நேரில் பார்த்த காவலாளிக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் ஆகியோரை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் ரமேசின் குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். முதலமைச்சரின் அனுமதி கிடைத்ததும் இவர்கள் சென்னை சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளனர்.

ad

ad