புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013

வாக்களிப்பு எமது மக்களின் வரலாற்றுக் கடமையாகும்: அறிவகத்தில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரத்தில் மனோகணேசன்
வாக்களிப்பு என்பது எம்மக்களின் சமூகப் பொறுப்பாக, வரலாற்றுக் கடமையாக உள்ளது. எனவே எங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் உள்வாங்கப்பட என வேண்டும் என “ அறிவகத்தில்” நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைச் செயலகமான “அறிவகத்தில் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் சு.தயாபரன் தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது.
இப் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், எம்.ஏ சுமந்திரன், பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா, கொழும்பு மாவட்ட நகர சபை உறுப்பினர் குகவரதன்,
கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி, வடமாகாண சபைக்கான தேர்தல் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நாவை.குகராசா, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள், மாந்தை கிழக்குப் பிரதேச சபை உபதவிசாளர் செந்தூரன், கட்சி செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறப்புரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் தனது உரையின் போது,
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை அதிலும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தளவில் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
கிளிநொச்சி என்ற பெயர் இப்பொழுது உலகம் முழுக்கப் பரீட்சயமாக இருக்கிறது. அனைத்து நாடுகளிலும் கிளிநொச்சி என்ற பெயர் அறியப்பட்டிருக்கிறது. அந்தக் கிளிநொச்சி என்ற பெயருக்குப் பின்னால் ஒரு உறவு, உணர்ச்சி, அழகு, வீரம் என்பன இருக்கிறது.
அனத்துமே இந்த தேர்தலின் பின்னர் சிறப்பாகப் பரிணமிக்க வேண்டும். ஆகவே வாக்களிப்பு என்பது உங்களது சமூகப் பொறுப்பாக வரலாற்றுக் கடமையாக உள்ளது. எங்களிடையே வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் ஒன்றாக உள்வாங்கப்பட வேண்டும்.
ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து நாம் இங்கு வருகிறோமென்றால் அதன் அர்த்தம் ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தனது தார்மீக ஆதரவை, அரசியல் ஆதரவை வழங்குகிறதென்றால் அதற்குக் காரணம் நாங்கள் தமிழ்த் தேசிய உணர்வால் ஆட்பட்டவர்கள் உள்வாங்கப்பட்டவர்கள் என்று அர்த்தம். எனத் தெரிவித்தார்.
இத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், எம்.ஏ சுமந்திரன், பா.அரிய நேந்திரன், சீ.யோகேஸ்வரன்,ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் பாஸ்கரா, கொழும்பு மாவட்ட நகர சபை உறுப்பினர் குகவரதன், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி, வடமாகாண சபைக்கான தேர்தல் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நாவை.குகராசா, மாந்தை கிழக்குப் பிரதேச சபை உபதவிசாளர் செந்தூரன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

ad

ad