புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013




விஜய்யை வைத்து படம் தயாரித்தவர்கள் பலரும் தாணு அணியில் இருப்பதாலும், எஸ்.ஏ.சி. ஆதரிப்பதாலும் தாணு அணி "விஜய் ஆதரவு பெற்ற அணி'யாகவும், சூர்யாவின் கஸின் பிரதர் ஞானவேல்ராஜா, கேயார் அணியில்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் கேயார் அணி "சூர்யாவின் ஆதரவு பெற்ற அணி'யாகவும் வர்ணிக்கப்படுகிறது.
நக்கீரன் 


சச்சரவும் சமாதானமும்!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இரண்டு செயலாளர் பதவிகளுக்கு கேயார் அணியில் ஞானவேல்ராஜாவும், "அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவாவும் போட்டியிடுகிறார்கள். "தனது வெற்றி முக்கியம்' என செயல்படுவதாக ஞானவேல் ராஜா மீது சிவாவுக்கு வருத்தம். இவரை சிவா கடுமையாக விமர்சிக்கவே... கேயார் அணி பிரபலங்கள்  உட்கார்ந்து பேசி இருவருக்கும் இடையே சமாதானம் செய்திருக்கிறார்கள்.

எளியவர்களுக்கு எட்டாத ஞானம்!


"ஞானவேல்ராஜா தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும்' என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறது எதிர் அணி. "சூர்யா, கார்த்தியை வைத்து பிரமாண்ட படங்களை தயாரிக்கும் ஞானவேல்ராஜா செயலாளரானால் சிறிய, எளிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை மதிக்கமாட்டார். அவரை லேசில் சந்திக்க முடியாது' என பிரச்சாரம் கிளம்ப... 

இதனால் தனது பெர்ஸனல் செல் நம்பருடன் கூடிய  ஆயிரம் விசிட்டிங் கார்டுகளை அச்சடித்து "24  மணி நேரமும் நீங்க என்னை தொடர்பு கொள்ளலாம்'  என வாக்காளர்கள் கையில் திணித்துவிட்டார் ஞானவேல் ராஜா.

கேயார் அணியில் கீறல்!


கேயார் அணியில் செயற்குழு உறுப்பினராகப் போட்டியிடும் நோக்கில் இருந்தார் மன்சூர் அலிகான். ஆனால் அவருக்கு வாய்ப் பளிக்காததால் சுயேச்சையாக செயற்குழு உறுப்பினராக களத்தில் குதித்துவிட்டார் மன்சூர்.

கலைப்புலி அணியில்  கசப்பு!


நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருக்கும் கருணாஸை, கலைப்புலி அணி சார்பில் செயலாளர் பதவிக்கு போட்டியிட வைக்க ஏற் பாடானது. கடைசி  நேரத் தில் அமீர் தலையிட்டு தேனப் பனை நிறுத்தச் சொன்னதால் கருணாஸ் செயற்குழு உறுப் பினர் பதவிக்கு நிறுத்தப்பட் டார். இதில் கருணாஸுக்கு ரொம்பவே அதிருப்தி. தான் சார்ந்திருக்கும் தாணு அணியின் அறிமுகக் கூட் டத்தில்கூட கருணாஸ் கலந்துகொள்ளவில்லை.

பரிசோ பரிசு!


"பொங்கல், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய  பண்டிகைகளின்போது உறுப்பினர்கள் அனைவருக் கும் தலா ஐயாயிரம் ரூபாய் "ஃபெஸ்டிவல் கிஃப்ட்' தரப் படும், வீட்டு மனை வாங்கித் தரப்படும். வயது வரம்பு உள்ளிட்ட நிபந்தனைகள் நீக்கப்பட்டு, விரும்பிக் கேட்கும் உறுப்பினர்களுக்கு மாத உதவித் தொகை தரப்படும்' என பிரச்சாரம் மேற்கொண்டது தாணு அணி.

பிரச்சினையைத் தீர்ப்போம்!


"டப்பிங் படங்களுக்குத் தரப்படும் முன்னுரிமையைக் கூட சிறு பட்ஜெட் தமிழ்ப் படங்களுக்குத் தராமல் வெளியிட மறுக்கும் சத்யம் தியேட்டர் உள்ளிட்ட சில தியேட்டர் அணுகுமுறை சரி செய்யப்படும். முடிந்தால்...  வீட்டுமனை வாங்கித் தரு வோம்' எனச் சொல்லி பிரச்சாரம் மேற்கொண்டது கேயார் அணி.

காமெடியும் சென்ட்டிமென்ட்டும்!


கேயார் அணி சார்பில்  செ.குழு உறுப்பினராகப் போட்டியிடும் தேவயானியின் ஃபீல்ட் ஒர்க் அணி பேதமில்லாமல் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. உறுப்பினர்களின் செல்போனுக்கு, தான் பேசிய வாய்ஸ் மெயில் ரெக்கார்டரையும் அனுப்பி வைக்கிறார். அதில், "நான் முதன் முதலாக செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். உங்க பொன்னான வாக்குகளை எனக்குத் தரவேண்டும்' என அதில் சென்ட்டிமென்ட்டாகப் பேசியுள்ளார் தேவயானி.

இதேபோல் மன்சூர் அலிகானும் வாய்ஸ் மெயில் அனுப்புகிறார்.

"அம்மா, தாயே... அய்யா... ஓட்டுப் பிச்சை கேட்டு  வந்திருக்கேன்' என்கிறது மன்சூர் குரல். 

"ஏம்ப்பா உனக்கு ஓட்டுப் பிச்சைப் போடணும்?' என ஒரு பெண்ணின் குரல் கேட்க...

"நான் சிறு பட தயாரிப்பாளர். சிறு பட தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை உணர்ந்தவன். எனக்கு ஓட்டுப் போட்டா உங்க பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பேன்' என மன்சூர் விளக்க...

"சரிப்பா... ஒனக்கு ஓட்டுப் போட்டுத் தொலைக்கிறேன்' என்கிறது அந்தப் பெண் குரல்.

 ஃபைனல் டச்!


ஆந்திரா கிளப்பில் "சிவசக்தி' பாண்டியன் அணி, அக்கார்ட் ஹோட்டலில் கேயார் அணி, ரெசிடென்ஸி ஹோட்டலில் தாணு அணி... என பார்ட்டி பரவசங்கள்தான்.

இந்த இதழ் வெளிவரும் 7-ந் தேதியன்று காலையில் தேர்தல். இரவில் ரிசல்

ad

ad