புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2013



ஐ.நாவில் சிறிலங்கா விவகாரம்: தவறிய பான் கீ மூனும் சுட்டிக்காட்டிய சுவிஸ் பிரதிநிதியும்
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இன அழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவனற்றினை தடுப்பதற்கான ஐ.நாவின் கடப்பாடுகள் ( R2P) குறித்த உள்ளக மாநாடொன்றில் சிறிலங்கா விவகாரம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஏற்பட்டு வரும் மனித உயிரிழப்புக்களை தடுப்பதற்கான ஐ.நாவின் கடப்பாடுகள் குறித்தான உள்ளக உரையாடலொன்று ஐ.நா அங்கத்துவ நாடுகள் இடையே நியூயோர்க்கில் இடம்பெற்றிருந்தது.
இம்மாநாட்டில் ஐ.நாவின் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்கள், ருவண்டா மற்றும் செர்பிறேனிக்கா ஆகிய நாடுகளைச் சுட்டிக்காட்டி தொடக்கவுரையினை நிகழ்த்தியிருந்த நிலையில், இலங்கையின் இறுதி யுத்த வேளையில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்தான ஐ.நாவின் உள்ளக அறிக்கையினைச் சுட்டிக்காட்டி, சுவிஸ் நாட்டுப்பிரிதிநிதி சிறிலங்கா விவகாரத்தினை பிரஸ்தாபித்துள்ளார்.
ருவாண்டா மற்றும் செர்பிறேனிக்கா ஆகிய அப்பகுதியில் ஏற்பட்ட மிகக் கொடுமையான உயரிழப்புக்களில் இருந்து அம்மக்களைப் பாதுகாப்பதற்கான முன்னடவடிக்கைகளை, தேசிய மற்றும் அனைத்துலக நாடுகள் தவறிவிட்டதென ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்கள் எனத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இன அழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவனற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான முற்தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அனைத்துலக சமூகம் தோற்றுவிட்டதென ஐ.நா பொதுச்சபையின் துணைத்தலைவர் ஜான் எலிசன் (Jan Eliasson) அவர்களும் கருத்துரைத்திருந்தார்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் கருத்துரைத்திருந்த ஐ.நாவுக்கான சுவிஸ் நாட்டுப் பிரதிநிதி போல் ஷேகர் (Paul Seger) அவர்கள், இலங்கையின் இறுதி யுத்த வேளையில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்தான ஐ.நாவின் உள்ளக அறிக்கையினைச் சுட்டிக்காட்டி மக்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகம் அணிதிரள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழினத்தின் மீதான சிங்கள அரசின் கொடிய போரில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற ஐ.நா தவறிவிட்டதென்ற குற்றசாட்டு பலமாகவுள்ள நிலையிலேயே சிரியா விவகாரத்தில் ஐ.நா அத்தவறினை விட்டுவிடக்கூடாது என்பதனையே ஐ.நாவின் இந்த முனைப்பினைக் காட்டுகின்றதெனலாம்.

ad

ad