புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக தலைப்புச் செய்தியுடன் போலி உதயன் பத்திரிகை
இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் எனவும் , மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அனந்தி தெரிவித்துள்ளார் .

இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் உதயன் பத்திரிகையினைப் போன்றே மிகவும் போலியாக பதிப்பிக்கப்பட்ட பத்திரிகைகள் யாழ் . மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த பத்திரிகையில் உதயன் பத்திரிகையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தினர் அவற்றைப் பெற்றுள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு ஒருவாறாக விடயம் விளங்கிய நிலையில் , அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் , உதயன் அலுவலகத்திற்கு விடயம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து , உதயன் பணியாளர்கள் விரைந்து அந்த போலிப் பத்திரிகைகளை குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து முழுமையாக அகற்றியுள்ளனர்.

குறித்த பத்திரிகையில் நேற்று அதிகாலை அனந்தி வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்தும் , எழிலன் இனந்தெரியாத நபர்களினால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்தும் உடனடியாக அவர் அரசாங்க கட்சிக்கு மாறியுள்ளதாக தலைப்பு செய்தி போடப்பட்டுள்ளது. எனினும் தற்போது பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்கியிருக்கும் அனந்தி , அதனை முழுமையாக மறுத்துள்ளதுடன் , தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பதாகவும் , இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மக்களிடம் கேட்குமாறு அவர் ஊடகங்களிடம் கேட்டுள்ளார்.

ad

ad