புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

பயங்கரவாத புலனாய்வு பொலிசாரால் ஒன்றரை மணிநேரம் விசாரிக்கப்பட்டார் அரியநேத்திரன் எம் பி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இன்று பயங்கரவாத தடுப்பு புலானாய்வுத் துறை அதிகாரிகளினால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு புலனாய்வுத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கான அழைப்பு அவருக்கு சென்ற வாரம் மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையம் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
தனக்கு விசாரணை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையில் விசாரணைக்கான காரணங்கள் பற்றி எதுவும் குறிப்பிடாத போதிலும், வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள விடுதலைப்புலி சந்தேக நபரொருவரின் கைத்தொலைபேசியில் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு தன் மீது விசாரணைகள் நடைபெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறுகின்றார்.
தான் ஒரு சட்டத்தரணி உதவியுடன் அங்கு சென்றிருந்த போதிலும், விசாரணையின் போது சட்டத்தரணிக்கு அங்கிருக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் விசாரணைகள் நடைபெற்று தன்னிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
குறித்த சிறைக்கைதி அங்கிருந்து கைத்தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி துண்டித்த பின்னர் தான் அந்த இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி 7-8 தடவைகள் உரையாடியுள்ளதாகவும், 20 நிமிடங்கள் மற்றும் 27 நிமிடங்கள் என கூட உரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை பதிவாகியுள்ளதாகவும் பொலிசார் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
பேசப்பட்ட விடயங்கள் பற்றி அவர்கள் தன்னிடம் கேட்டதாகவும் அரியநேத்திரன் தெரிவித்தார்.
சிறைச்சாலையில் கைதிகளிடம் தொலைபேசி இருப்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது பிரச்சினைகளை தெரிவிப்பது வழக்கம் என்றும் தான் தெரிவித்ததாக அரியநேத்திரன் கூறினார்.
தனது கைத்தொலைபேசிக்கு அழைப்புகள் வந்து துண்டிக்கப்பட்டால் தான் அந்த இலக்கத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தொடர்பை ஏற்படுத்தி உரையாடுவது வழமையானது என்று தான் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிடுகின்றார்.

ad

ad