புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2013

பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற போர்வையில் சில நாடுகள் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல்தரப்பு பங்குபற்றுதலுடன் சர்வதேச பாதுகாப்பை உறுதிபடுத்த விசேடமாக ஐக்கிய நாடுகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ள நிலையில் சில நாடுகளின் பொலிஸ்காரர் போன்ற செயற்பாடுகள் உலகத்துக்கு அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68ஆவது கூட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில்,
சர்வதேச ஒப்புதலுடன், இந்தக் கடமைகளை ஆற்றவென்று ஐ.நா மன்றம் பணிக்கப்பட்டிருக்கும் சூழலில், சில நாடுகள் சர்வதேச அரங்கில் பொலிஸ்கார் வேலை பார்ப்பது தேவையற்றது.
குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் இது போன்ற காரணங்களைக் காட்டி, சில நாடுகள் தலையிட்டு வருவது கவலையளிக்கும் விடயம்.
வேறு விதமான கலாசாரங்கள் உள்ள நாடுகளில், ஒரு குறிப்பிட்ட விதமான ஜனநாயகத்தைத் திணிக்க முயல்வது பெருங்குழப்பத்தையே விளைவிக்கும். 
இந்தத் தலையீடுகளால் இந்த நாடுகளில் என்ன மேலதிக ஸ்திரத்தன்மை ஏற்பட்டுவிட்டது.
இலங்கை பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர், இப்போது நாட்டில் நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.
வடபகுதி மக்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது, மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இது போல தெளிவாகத் தெரியும்படியான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், இலங்கை ஐ.நா மன்றத்துடன் ஒத்திசைந்து இயங்கிவரும் நிலையிலும், இலங்கையை சில நாடுகள் சர்வதேச அரங்கில், ஐ.நா. மன்றத்தின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி, குறிவைப்பது சரிதானா.
இலங்கை விவகாரங்களுக்குத் தரப்படும் அளவுக்கு மீறிய அழுத்தம் பல நாடுகளை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஐ.நா. மன்றம், இது போன்ற விடயங்களில், சமமற்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்படுவதைப் பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும்.
முப்பதாண்டு கால உள்நாட்டுப்போர் மற்றும் சுனாமி போன்றவைகளையும் மீறி, இலங்கை, ஐ.நா. மன்றத்தின் வளர்ச்சி இலக்குகளை எட்டியிருக்கிறது.
குறிப்பாக வறுமை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 25.2 சதவீதத்திலிருந்து 2012ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. 2012ஆம் ஆண்டின் மனித மேம்பாட்டு குறியீட்டெண்ணில் பட்டியலிடப்பட்டிருக்கும் 287 நாடுகளில், இலங்கைக்கு 92ஆவது இடம் தரப்பட்டிருக்கிறது என்பதையும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

ad

ad