புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2013

வடக்கு, கிழக்கிலிருந்து படைகளை அகற்றுக; அரசிடம் நவிப்பிள்ளை வலியுறுத்து 
போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை அகற்றும் பணியை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும்.

 
இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை.
 
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்துக்கு ஒரு சில முகாம்கள் தேவைப்படும் என்பதை நான் மறுக்க வில்லை. 
 
ஆனால், போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு எனக்கு அதீதமாகப்படுகின்றது. கணிசமாக அளவில் இருக்கும் இராணுவத்தினரை ஒரே நாளில் குறைத்து விட முடியாதென பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்.
 
எனினும் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்த இரு மாகாணங்களிலும் இருந்து இராணுவத்தை அகற்றும் பணியை அரசு துரிதப்படுத்த வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன். சிவில் சமூகத்தினரின் மத்தியில் இராணுவம் பெருமளவில் நடமாடுவதும் சிவில் நிர்வாகங்களில் தலையிடுவதும் முன்னாள் போராளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் மீதும் நாட்டுக்குத் திரும்பி வருபவர்கள் மீதும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும் அமைதியான சூழ்நிலைக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்பது எனது அபிப்பிராயம். என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும், போரின் முடிவு கொடுத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையை புதிய அதிர்வுடனான எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் நாடாகக் கட்டியயழுப்புவதற்குப் பதிலாக சர்வாதிகாரப் போக்கை நோக்கிய திசையில் நாட்டை இட்டுச் செல்வது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது என்றும் நவிப்பிள்ளை நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.

ad

ad