புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2013

அமெரிக்க ஓபன்: பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் ஆண்டிரியா ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன்: பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் ஆண்டிரியா ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் போட்டியின் இறுதிப்போட்டி நியூயார்க்கின் யூ.எஸ். டி.ஏ. பில்லி ஜீன் கிங் நேசனல் 
டென்னிஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. இதில் வில்லியம்ஸ் சகோதரிகளை தோற்கடித்த உலகின் 5-ம் நிலை ஆட்டக்காரர்களான 
செக் குடியரசு நாட்டின் ஆண்டிரியா
லவக்கோவா - லூசி ரடெக்கா ஜோடி, 8-ம் நிலை ஆட்டக்காரர்களான ஆஸ்திரேலியாவின் அஸ்லெய் பார்ட்டி - காசே டெல்லாக்குவாவுடன் மோதினர். 

இதில் ஆண்டிரியா ஜோடியானது 6-7(4/7),  6-1, 6-4 என்ற செட்டுகளில் ஆஸ்திரேலியாவின் அஸ்லெய் ஜோடியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த 4 லட்சத்து 60 ஆயிரம் டாலர் மதிப்புடைய அமெரிக்க ஓபன் டென்னிஸ் கோப்பையை கைப்பற்றிய முதல் செக் குடியரசு ஜோடி இதுவாகும்.  

ad

ad