புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2013

போரின் போது புலிகளின் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை!-யாழில் சரத் பொன்சேகா
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரணடைந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் செல்லப்பிள்ளைகளாக உள்ளனர்.
தவிரவும் சரணடைந்த ஏனைய 12 ஆயிரம் பேர் வரையிலான போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர் என யாழ் ஊடக மையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன், விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் பாப்பா, இளம்பரிதி, கலைபண்பாட்டுத் துறைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, அரசியல்துறைப் பொறுப்பாளர் தங்கன், மூத்த உறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்டே ஆயிரக்கணக்காணவர்கள் பிரான்ஸிஸ் பாதர் முன்னிலையில் படையினரிடம் சரணடைந்தமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சரத் பொன்சேகா அப்படி எவருமே சரணடையவில்லை என மறுத்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் 23,000 புலிகள் கொல்லப்பட்டனர். அவற்றுக்குள் இந்த காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் உள்ளடங்கி இருக்கலாம்.
இறுதி யுத்த காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் 50 - 60 புலிகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு இறுதி மரியாதை செய்து புலிகளால் எரிக்கப்பட்டதை நாம் ஆள் இல்லாத விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பார்த்தோம்.
அச் சந்தர்பத்தில் உயிரிழந்த புலிகளின் குடும்பத்திற்கு புலிகளால் அறிவிக்கப்படாடாமல் இருந்திருக்கலாம் அவர்களையே தற்போது காணவில்லை என பெற்றோர்கள் தேடலாம்.
இராணுவத்திடம் பெற்றோர்களால் தமது பிள்ளைகள் கையளிக்கப்பட்டு இருந்தால் இராணுவத்தினரால் பதிவேடுக்கப்பட்டு இருக்கும்.
அந்த பெற்றோருக்கு அவர்கள் பிள்ளையை கையேற்றதற்கு ஆதாரமாக இராணுவத்தினரால் ஆவணங்கள் வழங்கப்பட்டு இருக்கும். அதனை ஆதாரமாக கொண்டு அந்த பெற்றோர்கள் போராட்டம் நடத்தலாம் என தெரிவித்தார்.
யாழ் மாவட்ட தற்போதைய இராணுவத் தளபதி ஹத்துருசிங்க, வட மாகாணசபைத் தேர்தலில் தனது சார்பில் சிலரை களமிறக்கி உள்ளதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
புலிகளின் காலத்தில் மாதாந்த வருமானத்திற்கு புலிகளுக்கு தகவல் வழங்கியவர் ஹத்துருசிங்க, அதனால் இப்போதும் தனக்கு வருமானம் வரும் என நினைத்தால் அதனையும் அவர் செய்வார் எனக் கூறியுள்ளார்.
இவர் புலிகளிடம் இருந்து மாதாந்தம் 30, 000 ரூபாய் லஞ்சமாக பெற்றதாக பொலிஸார் எனக்கு கூறி இருந்தார்கள்.
தேர்தல் நோட்டிஸ் ஓட்டுவது மற்றையவர்களின் நோட்டிஸை கிழிப்பது போன்ற செயற்பாடுகளை செய்வது ஒரு சில இராணுவத்தினரே நான் எல்லா இராணுவத்தினரையும் நான் குற்றம் சொல்ல மாட்டேன்.
95 வீதமான இராணுவத்தினர் நேர்மையானவர்களே 5 வீதமானவர்களே அவரின் பின்னால் திரிகின்றனர்.
குறித்த இராணுவ அதிகாரியான யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க 5 வீதமான இராணுவத்தினரை வைத்தே யாழில் சட்டவிரோத நடவடிக்கைகளை செய்கின்றார்.
இந்த வடக்கு தேர்தல் மட்டுமல்ல வடமேல்மாகாண, வடமத்திய மாகாண, தேர்தல்கள் கூட நேர்மையாக ஜனநாயகமாக நடக்கும் என்பது சந்தேகமே.
இந்த தேர்தலை அரசாங்கம் வெளிநாட்டுக்காகவே நடத்த நினைக்கின்றதே தவிர ஜனநாயக ரீதியாக நடத்த நினைக்கவில்லை என மேலும் தெரிவித்தார்

ad

ad